கத்ரீனா கைஃபுக்கு கொரோனா!

Date:

பாலிவுட் நடிகை கத்ரீனா கைஃபுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் பகிர்ந்துள்ளார்.

கொரோனா தொற்றின் இரண்டாவது அலை காரணமாகத் தொற்று எண்ணிக்கை இந்தியா முழுவதும் வேகமாக அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றால் மும்பையில் வசித்து வரும் பல பாலிவுட் பிரபலங்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். ரன்பீர் கபூர், ஆலியா பட், ஆமிர் கான், கோவிந்தா, அக்‌ஷய் குமார் உள்ளிட்ட நடிகர்கள் கடந்த வாரங்களில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சையில் உள்ளனர்.

தற்போது நடிகை கத்ரீனா கைஃபுக்கும் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் ஸ்டோரி பிரிவில் கத்ரீனா பகிர்ந்துள்ளார். அதில், “எனக்கு கோவிட்-19 தொற்று உறுதியாகியுள்ளது. உடனடியாக என்னைத் தனிமைப்படுத்திக் கொண்டேன். வீட்டுத் தனிமையில் இருக்கப் போகிறேன். எனது மருத்துவர்களின் அறிவுரையின் பேரில் அத்தனை பாதுகாப்பு நடவடிக்கைகளையும் பின்பற்றி வருகிறேன்.

என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் அனைவரும் உடனடியாகத் தங்களைப் பரிசோதித்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உங்கள் அத்தனை பேரின் அன்புக்கும், ஆதரவுக்கும் நன்றி. தயவுசெய்து பாதுகாப்பாக இருங்கள். உங்களை நீங்கள் பார்த்துக் கொள்ளுங்கள்“ என்று கத்ரீனா குறிப்பிட்டுள்ளார்.

திங்கட்கிழமை அன்று தான் கத்ரீனாவின் காதலர் என்று சொல்லப்படும் சக நடிகர் விக்கி கௌஷலும், தனக்கு கொரோனா தொற்று இருப்பதாக உறுதிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் தொகுதி அதிமுக எம்எல்ஏ எம்.ஆர்.விஜயபாஸ்கர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். கரூர்...

காதலனுடன் சேர்ந்து வருங்கால கணவரை கொன்றது எப்படி? – போலீஸாரிடம் நடித்துக் காட்டிய சியா கோயல்

மகாராஷ்டிர மாநிலம் புனே நகரைச் சேர்ந்த பிரபல ரியல் எஸ்​டேட் தொழில​திபர்...

பாதசாரி கடவையில் ரோஸ்மேரியை பந்தாடிய பிரதேசசெயலாளர்!

மாத்தறை பொது மருத்துவமனைக்கு முன்னால் உள்ள பாதசாரிகள் கடக்கும் வெள்ளைக்கோடு இடத்தில்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்