மாதிவெல எரிபொருள் நிரப்பு நிலையத்திற்குள் நுழைந்த ஜீப் மோதியதில், எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர் பலத்த காயம் அடைந்ததுடன், எரிபொருள் நிரப்பு நிலையத்தில் இருந்த முச்சக்கர வண்டி, இரண்டு மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஒரு பம்ப் ஆகியவற்றுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.
காயமடைந்த ஊழியர் களுபோவில கொழும்பு தெற்கு பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையத்திற்குள் நுழைந்த வாகனத்தை நிறுத்த பிரேக் போடுவதற்குப் பதிலாக அக்சிலேட்டரை சாரதி மிதித்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தைத் தொடர்ந்து எரிபொருள் நிரப்பு நிலையத்தின் அலுவலகமும் சேதமடைந்துள்ளது.
சொகுசு வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டு நேற்று மாலை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். மிரிஹான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




