யாழில் கஞ்சா விற்ற ஆணும், ஹெரோயின் விற்ற பெண்ணும் கைது!

Date:

யாழ்ப்பாணம் – பொம்மைவெளியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்ட இருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.

யாழ்ப்பாணம் மாவட்ட பொலிஸ் புலனாய்வுப் பிரிவு இன்று நண்பகல் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்புத் தேடுதலில் இருவேறு இடங்களில் ஆண் ஒருவரும் பெண் ஒருவரும் கைது செய்யப்பட்டனர்.

பொம்மைவெளியைச் சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவர், ஒரு கிலோ 750 கிராம் கஞ்சா போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார்.

அத்துடன், பொம்மைவெளி 8ஆம் குறுக்குத் தெருவைச் சேர்ந்த 33 வயதுடைய பெண் ஒருவர், 5 கிராம் 750 மில்லிக்கிராம் ஹெரோயின் போதைப்பொருளுடன் கைது செய்யப்பட்டார். அவரிடமிருந்து 80 ஆயிரம் ரூபாய் பணமும் கைப்பற்றப்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர்கள் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் முற்படுத்தப்பட்டுள்ளனர். விசாரணைகளின் பின் யாழ்ப்பாணம் நீதிமன்றில் முற்படுத்தப்படுவர் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

வட்டமடு விவசாயிகளுக்கு இன பாகுபாடு- கல்முனை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு

வட்டமடு விவசாயிகளின் வாழ்வாதார நிலங்களில் விவசாயம் செய்வதற்குத் திருக்கோவில் பிரதேச செயலாளர்...

சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: யாழ். பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி ஆரம்பம்

சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு...

ராஜ் சோமதேவ அறிக்கை தாமதம்! செம்மணி புதைபுழி வழக்கு ஒத்திவைப்பு

செம்மணி புதைகுழி தொடர்பான வழக்கு இன்று யாழ் மேலதிக நீதவான் லெனின்குமார்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்