சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மொழிபெயர்ப்புக் கண்காட்சி, சர்வதேச மொழிபெயர்ப்பு தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மொழிபெயர்ப்புக் கற்கைகள் துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள வருடாந்த மொழிபெயர்ப்புக் கண்காட்சி இன்று (30) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் வேல்நம்பி பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு கண்காட்சியைத் திறந்து வைத்து பார்வையிட்டார்.
இதனைத் தொடர்ந்து இன்று பிற்பகல் 1.30 மணியளவில் வருடாந்த மொழிபெயர்ப்பு சஞ்சிகை வெளியீட்டு விழா உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
மேலும், இலங்கை வரலாற்றில் முதன்முறையாக மொழிபெயர்ப்புக் கற்கைகள் தொடர்பான தேசிய கருத்தரங்கு நாளை (ஒக்டோபர் 1) காலை 9.00 மணிக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கைலாசபதி கலையரங்கில் நடைபெறவுள்ளது.
மொழிபெயர்ப்புத் துறையின் முக்கியத்துவம், அதன் கல்வி மற்றும் சமூகப் பங்களிப்பு தொடர்பில் கவனம் செலுத்தும் வகையில் இந்நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.




