ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசாங்கத்தின் பாராளுமன்ற குழு கூட்டம் இன்று நடைபெறவுள்ளது.
மாலை 5 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாவட்டத் தலைவர்கள் கலந்துரையாடலுக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன மாவட்ட தலைவர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.




