மஹியங்கனை வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல விகாரையில் 6 அரிய புத்தர் சிலைகள் திருட்டு!

Date:

இலங்கையின் ஊவா மாகாணம், மஹியங்கனை பகுதியில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாவரகல ஆரண்ய சேனாசனத்தில் இருந்து, தொன்மையான பெறுமதி கொண்ட ஆறு சிறிய புத்தர் சிலைகள் திருடப்பட்டுள்ளதாக மஹியங்கனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விகாரையின் வழிபாட்டு மண்டபம் மூடப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில், அதன் கதவை உடைத்து உள்ளே நுழைந்த திருடர்கள், அங்கிருந்த புத்தர் சிலைகளைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பில் விகாரையின் விகாராதிபதி தேரர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

திருடப்பட்ட சிலைகள் ஒவ்வொன்றும் சுமார் 6 அங்குல உயரம் கொண்டவை எனவும், அவை அரிய வகையைச் சேர்ந்தவை என்பதுடன், அளவிட முடியாத தொல்லியல் மற்றும் வரலாற்றுப் பெறுமதியைக் கொண்டவை எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

ஊவா மாகாணத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மஹேஷ் சேனாரத்ன உள்ளிட்ட உயர் பொலிஸ் அதிகாரிகளின் ஆலோசனையின் பேரில், மஹியங்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சிசிர ஹேரத் தலைமையிலான குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

திருடப்பட்ட அரிய புத்தர் சிலைகளை மீட்பதற்கும், திருட்டில் ஈடுபட்டவர்களைக் கண்டறிவதற்கும் பொலிஸார் விசாரணைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நாட்டின் பொருளாதாரம் மீண்டுவிட்டதாகக் கூறினாலும், உங்கள் பர்ஸில் பணம் இருக்கிறதா? சாதாரண மக்களைத் தாக்கப்போகும் அடுத்த பேரிடி! உலக வங்கியின் பகீர் எச்சரிக்கை!

இலங்கையின் பொருளாதாரம் மீண்டாலும் மக்களின் வாழ்க்கையில் மாற்றமில்லை! உணவுப் பொருட்களின் விலையேற்றம்...

லலித் – குகன் காணாமல் ஆக்கப்பட்ட வழக்கு! நீதிமன்றில் முன்னிலையான கோட்டாபய ராஜபக்ச!

காணாமல் ஆக்கப்பட்ட அரசியல் செயற்பாட்டாளர்களான லலித் குமார் வீரராஜ் மற்றும் குகன்...

நாமலின் ஏர்பஸ் இலஞ்ச வழக்கு! சாட்சியமளிக்க இலங்கை வரும் பிரான்ஸ் புலனாய்வாளர்!

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான ஏர்பஸ் இலஞ்சக் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்