டிட்வா புயலால் சுமார் ஓராண்டாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் மீண்டும் நகர்வு!

Date:

டிட்வா (Ditwah) புயலால் ஏற்பட்ட கடுமையான பாதிப்புகளினால், கம்பளை – உலப்பனை இடையிலான பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ரயில் இன்று (19) பேராதனை ரயில் நிலையத்திற்குக் கொண்டுவரப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ரயில் பாதைக்கு ஏற்பட்ட சேதம் காரணமாக, தம்பிளிகலை – வரக்காப்பிட்டிய ரயில் நிலையத்திற்கு அருகில் குறித்த ரயில் சுமார் ஓராண்டு காலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், சேதமடைந்த ரயில் பாதை புனரமைக்கப்பட்டதைத் தொடர்ந்து, இன்று காலை குறித்த ரயில் பேராதனை ரயில் நிலையத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

புயலால் பாதிக்கப்பட்ட ரயில் போக்குவரத்து கட்டமைப்புகளை மீளமைக்கும் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்த நகர்வு இடம்பெற்றுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

வரி மதிப்பீட்டாளருக்கு 16 வருட சிறைத்தண்டனை

இலங்கை உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தில் மதிப்பீட்டாளராகப் பணியாற்றிய ஒருவர், தொழிலதிபர் ஒருவரிடமிருந்து...

புலிகளின் சின்னங்களின்றி உயிரிழந்தவர்களை நினைவுகூரலாம்!

தடை செய்யப்பட்ட அமைப்புகளின் அடையாளங்களையோ அல்லது சின்னங்களையோ காட்சிப்படுத்தாது, உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்...

வரவு செலவு திட்டத்தின் 2ஆம் வாசிப்பு 97 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

2027 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு, 97...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்