தீயில் சங்கமமானார் எம்.கே.சிவாஜிலிங்கம்!

Date:

மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவருமான எம்.கே. சிவாஜிலிங்கத்தின் உடலுக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவரும் இந்திய பாராளுமன்ற உறுப்பினருமான தொல்.திருமாவளவன் நேரில் அஞ்சலி செலுத்தினார்.

வல்வெட்டித்துறையில் பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சிவாஜிலிங்கத்தின் பூதவுடலுக்கு அவர் மலர்மாலை அணிவித்து தனது இறுதி அஞ்சலியைச் செலுத்தியதுடன், அன்னாரின் குடும்பத்தினருக்கும் உறவினர்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து அவரது உடல் ஊரணி இந்து மயானத்தில் மாலை 3.45 அளவில் தீயில் சங்கமமானது.

உடல்நலக் குறைவு காரணமாகத் தனது 69ஆவது வயதில் எம்.கே. சிவாஜிலிங்கம் காலமாகியிருந்தார்.

வல்வெட்டித்துறை, நெடியகாட்டில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, அன்னாரின் உடல், இன்று மதியம் வல்வெட்டித்துறை சந்தியில் பொதுமக்களின் அஞ்சலிக்காகவும் வைக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, வல்வெட்டித்துறை ஊறணி இந்து மயானத்திற்குப் பூதவுடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டது.

நீண்ட காலமாகச் சிறுநீரக செயலிழப்பு உள்ளிட்ட உடல்நலக் குறைவுகளால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வந்த அவர், கடந்த 14ஆம் திகதி இரவு தனது இல்லத்தில் காலமானார்.

வடமராட்சி வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகக் கொண்ட எம்.கே. சிவாஜிலிங்கம், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (TELO) போராளியாகத் தனது அரசியல் பயணத்தைத் தொடங்கி, தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் (TNA) சார்பில் 2001 மற்றும் 2004 ஆம் ஆண்டுகளில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண சபை உறுப்பினராகவும், கடந்த ஆண்டு முதல் வல்வெட்டித்துறை நகரசபையின் தலைவராகவும் தெரிவாகியிருந்தார்.

அவரது இறுதி அஞ்சலி கூட்டத்தில் தொல்.திருமாவளவன், பழ.நெடுமாறனின் செயலாளர், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சி.சிறிதரன், செல்வம் அடைக்கலநாதன், சீ.வீ.கே.சிவஞானம், கோவிந்தம் கருணாகரன், இந்திரகுமார் பிரசன்ன, சுரேஷ் பிரேமச்சந்திரன், சிவசக்தி ஆனந்தன், ந.சிறீகாந்தா, வீ.ஆனந்தசங்கரி உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண்டிருந்தனர்.

spot_imgspot_img

More like this
Related

உணவு நஞ்சானதால் 35 மாணவர்கள் பாதிப்பு

பாடசாலையில் வழங்கப்பட்ட உணவை உட்கொண்டதன் விளைவாக உணவு நஞ்சானதாகக் கருதப்படும் நிலையில்,...

காமுகனின் பிணை இரத்து

வட மத்திய மாகாண உயர் நீதிமன்ற நீதிபதி இந்திக அத்தநாயக்க, அனுராதபுர...

யாழில் நடந்த விபரீதம்

யாழ்ப்பாணம், அச்சுவேலி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அச்செழு, பூலாசிட்டி பகுதியில், நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்