தலைமுடியில் ‘பம்ப்’ அதிகம் எனக் கூறி 15 வயது மாணவனைக் காது மீது தாக்கிய பிரதி அதிபர் கைது!

Date:

இலங்கையின் நாத்தாண்டிய பகுதியில் உள்ள பிரபல பாடசாலையொன்றில், 15 வயதுடைய மாணவனை வகுப்பறைக்கு முன்னால் முழங்காலிட்டு அமரச் செய்து, காதில் தாக்கியதாகக் கூறப்படும் பிரதி அதிபர் ஒருவர் மாரவில பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தபோவ, நாத்தாண்டிய பகுதியைச் சேர்ந்த பிரதி அதிபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பாடசாலையில் தரம் 10 இல் கல்வி பயிலும் மாணவனே இந்தச் சம்பவத்தால் பாதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் தகவலின்படி, மாணவனின் தலைமுடி தொடர்பான விவகாரமே இந்தச் சம்பவத்திற்குக் காரணமாக அமைந்துள்ளது.

பாடசாலை மாணவர்களைப் பரிசோதித்தபோது, குறித்த மாணவனின் தலைமுடி நீளமாக இருப்பதாகக் கூறிய பிரதி அதிபர், மறுநாள் பாடசாலைக்கு வருவதற்கு முன்னர் தலைமுடியை வெட்டிக்கொண்டு வருமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதன்படி, மறுநாள் மாணவன் தலைமுடியை வெட்டிக்கொண்டு பாடசாலைக்கு வந்துள்ளார். எனினும், தலைமுடியின் ‘பம்ப்’ (Bump) பகுதி அதிகமாக இருப்பதாகக் கூறி பிரதி அதிபர் மீண்டும் மாணவனைத் திட்டியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, மாணவனை வகுப்பறைக்கு முன்னால் முழங்காலிட்டு அமரச் செய்து, அவரது காதில் பலமாக இரண்டு முறை தாக்கியதாகப் பொலிஸ் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பாகப் பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், மாரவில தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இதன்போது, பாதிக்கப்பட்ட மாணவனிடம் வாக்குமூலம் பெறப்பட்டதுடன், மருத்துவப் பரிசோதனைக்காக அவர் மாரவில வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரின் அறிவித்தலுக்கு அமைய, சந்தேகநபரான பிரதி அதிபர் நேற்று (13) நண்பகல் மாரவில தலைமையகப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் மகளிர் பிரிவில் முன்னிலையாகியுள்ளார்.

அவரிடம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்குமூலம் பெற்ற பின்னர், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஹலாவத்த பிரிவுக்குப் பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரோஹான் பெரேராவின் மேற்பார்வையிலும், நாத்தாண்டிய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தம்மிக்க ஹப்புகொடவின் ஆலோசனையிலும் இந்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

மாரவில தலைமையகப் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சரத் சமரவிக்ரமவின் வழிகாட்டுதலில், சிறுவர் மற்றும் மகளிர் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் சாவித்திரி சிறிமன்ன உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

நிதி முறைகேடு குற்றச்சாட்டில் தொழிற்சங்கவாதி ஆனந்தபாலித கைது!

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தில் 3.11 மில்லியன் ரூபா பெறுமதியான மேலதிக நேரக்...

மேலும் 3 புதிய அரசியல் கட்சிகளுக்கு அங்கீகாரம்

1981 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க பாராளுமன்ற தேர்தல் சட்டத்தின்...

ஆதவ் அர்ஜுனாவை பிரிவதாக டெய்சி மார்ட்டின் அறிவிப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா உடனான 14 ஆண்டு கால திருமண வாழ்க்கையில்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்