ஹெரோயின், கஞ்சா கலந்து அடித்துவிட்டு பிக்குகள் போராட்டத்தில் பங்கேற்ற ஆசாமி!

Date:

அனுராதபுர புனிதப் பகுதியில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பலாங்கொட கஸ்ஸப தேரருடன் இருந்த நபர் ஒருவர், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார். அவர் ஹெரோயின் மற்றும் கஞ்சா போதையில் இருந்தமை விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டவர் பாலதுர ரங்கிரியாலகே பிரசாத் சுசந்த ஜயசிறி ஆவார்; இவர் ‘தஹம் பிரசாத்’ என்றும் அழைக்கப்படுகிறார்.

அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, ருவன்வெலி மகா சேயவிற்கு அருகில் சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த குழுவினரை அங்கிருந்து அகற்ற பொலிஸார் முற்பட்டபோது பதற்றமான சூழல் ஏற்பட்டது; இது பின்னர் மோதலாக மாறியது.

இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இருவரை பொலிஸார் கைது செய்தனர்; அவர்களில் ஒருவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தமை கண்டறியப்பட்டது.

spot_imgspot_img

More like this
Related

கஸ்ஸப தேரர் குழுவிற்கு மனநல, போதைப்பொருள் சோதனை

அநுராதபுரம் ருவான்வெலிசாய அருகே நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணித்து சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில்...

இளம்பெண் படுகொலை: காதலன் கைது!

நுவரெலியாவில் உள்ள தங்குமிடம் ஒன்றில் பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்...

மரணப்படுக்கையிலிருக்கும் சிவாஜியை நீதிமன்றத்தில் ஆஜராக சொல்கிறது ரிஐடி!

யாழ்ப்பாணம் , பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிவாஜிலிங்கம்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்