கொழும்பு தேசிய மருத்துவமனையில், பலத்த மழையினால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கின் காரணமாகச் சில மருத்துவமனைச் செயல்பாடுகள் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு இயல்பு நிலை திரும்பியுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களைச் சுத்தம் செய்யும் பணியில் மருத்துவமனை ஊழியர்கள் ஈடுபட்டனர். சில மணிநேரங்களிலேயே இந்தப் பணிகளை முடித்து, மருத்துவமனையின் செயல்பாடுகளை மீண்டும் இயல்பு நிலைக்குக் கொண்டு வந்தனர்.
கொழும்பில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட மேகவெடிப்பால், ஒரு மணிநேரத்தில் 129 மி.மீ மழை பதிவாகியுள்ளது; இதனால் நகரின் பல வீதிகளும் தாழ்வான பகுதிகளும் வெள்ளத்தில் மூழ்கின.




