தீபாவளி உடுப்புக்களுடன் 100 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்

Date:

கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற ‘பொலேரோ’ ரக வாகனம் ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று (03) காலை 10:00 மணியளவில், நுவரெலியா – ஹட்டன் – நானுஓயா வட்ட வீதியில், கிரிமெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வணிக நோக்கத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ஆடைகளை ஏற்றிச் சென்றபோதே இந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வாகனம் வீதியை விட்டு விலகி சரிவுப் பகுதியில் சாய்ந்த நிலையில் நின்றது. அப்போது உள்ளே இருந்த மூவரும் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பித்தனர்; அவர்கள் வெளியேறிய சில கணங்களிலேயே, சாய்ந்த நிலையில் இருந்த அந்த வாகனம் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

கல்முனையில் வீடு தீக்கிரை: தீயணைப்புப் பிரிவின் தயார்நிலை குறித்து பொதுமக்கள் கேள்வி

கல்முனை, தைக்கா வீதியில் உள்ள வீடொன்றில் மின்சாரக் கசிவு காரணமாக ஏற்பட்ட...

சொறிக்கல்முனை – வீரமுனை பிரதான வீதியில் பாரிய ஆபத்து-இடிந்து விழும் நிலையில் வீதி

அம்பாறை மாவட்டம்  சம்மாந்துறை நாவிதன்வெளி  பிரதேசத்தை இணைக்கும் சொறிக்கல்முனை – வீரமுனை...

பொலிஸ் மா அதிபரினால் பொறுப்பதிகாரியின் உத்தியோகப்பூர்வ இல்லம் திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள மஹாஓயா பொலிஸ் நிலையத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட பொலிஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்