தீபாவளி உடுப்புக்களுடன் 100 அடி பள்ளத்தில் விழுந்த வாகனம்

Date:

கதிர்காமத்திலிருந்து தலவாக்கலை நோக்கிச் சென்ற ‘பொலேரோ’ ரக வாகனம் ஒன்று, வீதியை விட்டு விலகி சுமார் 100 அடி ஆழமான பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதாக நானுஓயா பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்தச் சம்பவம் நேற்று (03) காலை 10:00 மணியளவில், நுவரெலியா – ஹட்டன் – நானுஓயா வட்ட வீதியில், கிரிமெட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வரவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வணிக நோக்கத்திற்காகத் தயார் நிலையில் இருந்த ஆடைகளை ஏற்றிச் சென்றபோதே இந்த வாகனம் விபத்துக்குள்ளானது.

வாகனத்தில் இருந்தவர்களின் தகவல்படி, வாகனம் வீதியை விட்டு விலகி சரிவுப் பகுதியில் சாய்ந்த நிலையில் நின்றது. அப்போது உள்ளே இருந்த மூவரும் வாகனத்திலிருந்து குதித்துத் தப்பித்தனர்; அவர்கள் வெளியேறிய சில கணங்களிலேயே, சாய்ந்த நிலையில் இருந்த அந்த வாகனம் பள்ளத்தில் உருண்டு விழுந்தது. இந்த விபத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளது.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்