யாழில் போலி உறுதிப் பத்திரங்கள் மூலம் அரச காணிகளைச் சுவீகரிக்கும் மோசடி வலையமைப்பு

Date:

யாழ்ப்பாணத்தில் , நீர்ப்பாசன திணைக்களத்தின் காணியை அடாத்தாக கையகப்படுத்தியிருந்த தனியாரிடம் இருந்து குறித்த காணியை பருத்தித்துறை நீதவான் நீதிமன்று மீட்டு , நீர்பாசன திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளது.

கரவெட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட காரணவாய் மேற்கு கிராம சேவையாளர் பிரிவில் நீர்ப்பாசன திணைக்களத்திற்கு சொந்தமான நீரேந்து பிரதேசத்தில் சுமார் 40 பரப்பு காணியை அடாத்தாக தனி நபர் ஒருவர் கையகப்படுத்தி , அதற்கு எல்லை வேலிகளையும் நட்டு வைத்திருந்தார்.
இது தொடர்பில் நீர்ப்பாசன திணைக்களத்தினரால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில்  , விசாரணைகளின் அடிப்படையில் குறித்த காணி நீர்ப்பாசன திணைக்களத்திற்கு உரியது என்பதனை அறிந்து காணியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளிக்க உத்தரவிட்டது.
அதன் அடிப்படையில் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை , நீதிமன்ற பதிவாளர் தலைமையிலான நீதிமன்ற உத்தியோகஸ்தர்கள் , நெல்லியடி பொலிசாரின் பாதுகாப்புடன் காணியை நீர்ப்பாசன திணைக்களத்திடம் கையளித்ததை அடுத்து , குறித்த காணியை சுற்றி நடப்பட்டிருந்த எல்லை வேலிகளை அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அதேவேளை காணியை தற்போது உரிமை கோரிய நபருக்கு வேறு நபரே காணியை விற்பனை செய்ததாக அறிய முடிகிறது
யாழ்ப்பாணத்தில் அரச காணிகள் , நீரேந்து பிரதேசமாக உள்ள நீர்ப்பாசன திணைக்களத்திற்க்கு சொந்தமான காணிகள் , காணி உரிமையாளர்களை அடையாளம் காண முடியாத காணிகள் என்பவற்றுக்கு போலி உறுதி முடிப்புக்கள் செய்து காணி மோசடியில் மிக பெரிய வலையமைப்பு செயற்படுவதாக கடந்த சில வருடங்களாக பொலிஸார் எச்சரித்து வருவது குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்