30 ஆண்டுகாலப் பிரச்சினைகளுக்கு தீர்வு வேண்டும் – நவம்பர் 9 அன்று அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நாடு தழுவிய ரீதியில் சுகவீன விடுப்புப் போராட்டம்!

Date:

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் 30 வருடகாலமாகத் தீர்க்கப்படாத தொழில்சார் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி, எதிர்வரும் 2026 நவம்பர் 9ஆம் திகதி நாடு தழுவிய ரீதியில் ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.
இது குறித்து யாழ் ஊடக அமையத்தில் இன்று (3) ஊடக சந்திப்பை முன்னெடுத்து இவ்வாறு தெரிவித்த குறித்த சங்கத்தின் பிரதினிதிகள் மேலும் தெரிவிக்கையில் –
அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவைப் பிரமாணக் குறிப்பை நடைமுறைப்படுத்துவதன் ஊடாகவே தமது நீண்டகாலத் தொழில்சார் பிரச்சினைகளுக்கு அடிப்படைத் தீர்வைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
குறிப்பாக, நியாயமான பதவி உயர்வுகள், சம்பள ஏற்றங்கள் உள்ளிட்ட தொழில்சார் உரிமைகளை உறுதிப்படுத்தும் நோக்கில், அரசின் பல்வேறு மட்டங்களிலுள்ள பொறுப்புவாய்ந்த தரப்பினரிடம் பல தடவைகள் உரிய ஆவணங்கள் மற்றும் ஆதாரங்களுடன் கோரிக்கைகள் எமது தரப்பால் முன்வைக்கப்பட்டது.
அத்துடன் இதுதொடர்பாக கவனயீர்ப்புப் போராட்டங்களும் எம்மால் முன்னெடுக்கப்பட்டன.
எனினும், இதுவரையில் எமது குறித்த பிரச்சினைகளுக்குத் தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த 2026 ஒக்டோபர் 11ஆம் திகதி மத்திய மற்றும் மாகாண அரச சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் தொழிற்சங்கக் கூட்டமைப்பு மேற்கொண்ட தீர்மானத்துக்கு அமையவே நவம்பர் 9ஆம் திகதி ஒருநாள் சுகவீன விடுப்புப் போராட்டத்தை முன்னெடுக்கத் தீர்மானித்துள்ளோம்.
மேலும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 14(1) பிரிவினால் உத்தரவாதப்படுத்தப்பட்டுள்ள தொழிற்சங்க உரிமைகள் மற்றும் சர்வதேச தொழிலாளர் அமைப்பின் 87 மற்றும் 98 ஆகிய உடன்படிக்கைகளின் அடிப்படையில், தொழிலாளர்கள் தமது தொழில்சார் உரிமைகளுக்காகப் போராடுவதற்கான உரிமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தொழிற்சங்கக் கூட்டமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.
எனவே, சட்டரீதியான தொழிற்சங்க நடவடிக்கையாக முன்னெடுக்கப்படும் இச்சுகவீன விடுப்புப் போராட்டத்தை மலினப்படுத்தாமல், அதன் நோக்கத்தையும் அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் நியாயமான கோரிக்கைகளையும் அனைத்துத் தரப்பினரும் மதித்து நடக்க வேண்டும் எனத் தொழிற்சங்கக் கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
spot_imgspot_img

More like this
Related

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...

வங்கி கணக்குகளைத் திறக்க, வாகன வருவாய் உரிமங்களைப் புதுப்பிக்க TIN சான்றிதழ் தேவையில்லை: நிதி அமைச்சு

நிதி அமைச்சு வெளியிட்டுள்ள விளக்கத்தின்படி, வரி செலுத்துவோர் அடையாள எண் (TIN)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்