ஐ.ம.ச, ஐ.தே.க கூட்டும் வெற்றி பெறுவது சிரமம்!

Date:

ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி இடையிலான கூட்டணி வெற்றியைத் தேடித்தரும் என்று கூற முடியாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

“ஐக்கிய தேசியக் கட்சியும் ஐக்கிய மக்கள் சக்தியும் இணைந்தால் அது ஒரு அரசியல் வெற்றியாக அமையும் என்றும், அத்தகைய கூட்டணி எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெறும் என்றும் சிலர் எதிர்பார்க்கின்றனர். ஆனால், இன்றைய அரசியல் சூழல் மாறியுள்ளதால், இத்தகைய எதிர்பார்ப்பு தவறானதாக இருக்கலாம்” என்று விக்ரமசிங்க கட்சியின் உறுப்பினர்களிடம் கூறினார்.

“மில்லினியல் (Millennial) மற்றும் ஜென் இசட் (Gen Z) தலைமுறையினரின் சிந்தனை முறைகளை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தத் தலைமுறைகளைச் சேர்ந்தவர்களுடன் நான் கலந்துரையாடியுள்ளேன். கட்சியின் செயல்பாடுகள் இணையவழியில் (online) முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதே அவர்களின் கருத்தாக உள்ளது. மேலும், ஐந்து ஆண்டு காலத்திற்கு மட்டும் தேர்தல் விஞ்ஞாபனங்களைத் தயாரிக்கும் காலம் முடிவுக்கு வரப்போகிறது. எனவே, நீண்ட காலத்திற்குத் தேவையான கொள்கைகளை உருவாக்க வேண்டும்; உண்மையில், 25 ஆண்டுகாலத்தைக் கருத்தில் கொண்டு கொள்கைகள் வகுக்கப்பட வேண்டும். ஐக்கிய தேசியக் கட்சி இத்தகைய மாற்றங்களைச் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது” என்று விக்ரமசிங்க தெரிவித்தார்.

“மில்லினியல் மற்றும் ஜென் இசட் தலைமுறையினருக்கு அரசியல் கட்சிகள் மற்றும் அரசியல் குறித்த போதிய புரிதல் இல்லை. இருப்பினும், எதிர்காலத் தேர்தல்களில் வெற்றி பெற வேண்டுமானால், ஒரு கட்சி இவர்களை ஈர்க்க வேண்டியது அவசியம். தற்போதைய அரசாங்கம் இவர்களின் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யத் தவறியுள்ளதால், இந்தத் தலைமுறையைச் சேர்ந்த பலர் வெளிநாடுகளுக்குச் செல்லக்கூடும். 2022-ஆம் ஆண்டு இலங்கையில் இடம்பெற்ற ‘அரகலய’ (மக்கள் போராட்டம்) நிகழ்வில் இத்தலைமுறையினர் பங்கேற்றனர்; வங்காளதேசத்தில் இடம்பெற்ற எழுச்சியிலும் இதே போன்றதொரு சூழலையே காண முடிந்தது” என்றும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், புதிய தலைமுறையினரைக் கவரும் வகையில் ஐக்கிய தேசியக் கட்சி மறுசீரமைக்கப்படும் என்றும் விக்ரமசிங்க தெரிவித்தார்.

spot_imgspot_img

More like this
Related

பட்டினியால் இறந்து சொர்க்கம் செல்லலாமென கூறி 190 பேரை கொன்ற மதகுருவுக்கு 200 வருட சிறை

கென்யாவின் ஷாகஹோலா வனப்பகுதியில் பட்டினி கிடந்து உயிரிழக்கத் தூண்டிய மதக் குழுவின்...

கமலின் அடுத்த படம் ‘சண்டியர்’

கமல்ஹாசனின் நடிப்பில் உருவாகி வரும் படத்துக்கு ‘சண்டியர்’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளதாக படக்குழு...

பொலிஸ்மா அதிபரின் முறைப்பாடு: கம்பஹா நீதவானுக்கு இடமாற்றம்

கம்பஹா நீதவான் பந்துல குணரத்ன, காவல்துறை மா அதிபருக்கு எதிராக நீதிமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்