காட்டு யானை தாக்கி 76 வயது முதியவர் பரிதாபமாக உயிரிழப்பு

Date:

அம்பாறை மாவட்டம், தமன பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அலஹேனா பகுதியில் இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

 இன்று(1)  காலை  இடம்பெற்ற   சம்பவத்தில், அலஹேனா கிராமத்தைச் சேர்ந்த 76 வயதான கே. பியசேன என்பவரே உயிரிழந்தவராவார்.உயிரிழந்த நபர் அப்பகுதியிலுள்ள கல் குவாரி ஒன்றில் கல்வெட்டும் தொழிலாளியாகப் பணிபுரிந்து வந்தவராவார்.  தனது வழக்கமான பணிகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த வேளையிலேயே, எதிர்பாராதவிதமாக அங்கு நின்ற காட்டு யானை அவரைத் தாக்கிக் கொன்றுள்ளது.

அலஹேனா, மடவலலந்தா உள்ளிட்ட அதனைச் சூழவுள்ள கிராமப் பகுதிகளில் கடந்த பல நாட்களாகவே ஒற்றை காட்டு யானையொன்று தொடர்ச்சியாகச் சுற்றித் திரிந்து வருவதாக அப்பகுதி கிராம மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இக் காட்டு யானையின் நடமாட்டத்தால் கிராம மக்கள் அச்சமடைந்திருந்த நிலையிலேயே தற்போது இந்த உயிரிழப்புச் சம்பவம் சம்பவித்துள்ளது.

இச் சம்பவம் குறித்து தமன பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், பிரேதப் பரிசோதனைகளுக்காக சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

தங்களது உயிர்களுக்கும் உடைமைகளுக்கும் அச்சுறுத்தலாக விளங்கும் இந்த ஒற்றை யானையை உடனடியாக அப்பகுதியிலிருந்து அப்புறப்படுத்தி, வனப்பகுதிக்குள் விரட்டியடிக்க வனஜீவராசிகள் திணைக்கள அதிகாரிகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என மக்கள் கவலையுடனும் ஆத்திரத்துடனும் கோரிக்கை விடுக்கின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்