பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவாவின் வழிகாட்டலில் முன்னெடுக்கப்பட்ட ‘கிளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ சிரமதானப் பணி

Date:

பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ அபூபக்கர் ஆதம்பாவா அவர்களின் ஆலோசனைக் கிணங்க, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இன்றைய தினம் ‘கிளீன் ஸ்ரீலங்கா – அத்தம’ விசேட சிரமதான வேலைத்திட்டம் மிகச் சிறப்பாக  முன்னெடுக்கப்பட்டது.

சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாப்பதையும் பொது இடங்களைத் தூய்மையாகப் பராமரிப்பதையும் நோக்கமாகக் கொண்டு முன்னெடுக்கப்பட்ட இப் பணியில், பாராளுமன்ற உறுப்பினர் அபூபக்கர் ஆதம்பாவா   நேரடியாகக் களத்தில் இறங்கி மக்களுடன் இணைந்து  வேலைகளை அருகிருந்து மேற்பார்வையும் செய்தார்.

இன்றைய ‘அத்தம’ வேலைத்திட்டத்தின் கீழ் சாய்ந்தமருது பிரதேசத்தின்   மேற்குப் புறக் குருநல் கஞ்சி ஆற்றுப் பிரதேசம், 17ஆம் பிரிவு கடற்கரைப் பிரதேசம்,பௌசி விளையாட்டு மைதானம் மற்றும் அதனை அண்டிய கடற்கரைப் பகுதி பல முக்கிய பகுதிகள்  தூய்மைப்படுத்தப்பட்டன:

தூய்மைப்படுத்தல் பணிகளை விரைவுபடுத்தும் நோக்கில், மாநகர சபை மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தின் கனரக பொறி இயந்திரங்கள்   வரவழைக்கப்பட்டு, குருநல் கஞ்சி ஆற்றுப் படுக்கைகள் முற்றாகத் தூய்மைப்படுத்தப்பட்டன. அத்துடன், இப் பணியின் ஊடாகப் பழுதடைந்திருந்த சாய்ந்தமருது மாவடிப்பள்ளி வண்ட் வீதியும் உடனடியாகச் சீரமைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

சாய்ந்தமருது பிரதேச செயலாளரின் சிறப்பான ஏற்பாட்டில் இடம்பெற்ற இச்சிரமதானப் பணியில் உதவிப் பிரதேச செயலாளர்,உதவித் திட்டமிடல் பணிப்பாளர் மற்றும் பிரதேச செயலக ஊழியர்கள்,பிரஜா சக்தி தலைவர்கள்,கல்முனை மாநகர சபை ஊழியர்கள்,விளையாட்டுக்கழக உறுப்பினர்கள்சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் பெருமளவில் திரண்டு வந்து தங்களது பங்களிப்பை வழங்கினர்.

பிரதேசத்தின் தூய்மையையும் அழகியலையும் மீளப்பெறும் வகையில் முன்னெடுக்கப்பட்ட இந்தச் கூட்டு முயற்சியினை அப்பகுதி மக்கள் பெரிதும் பாராட்டியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்