காட்டு யானையைக் கொல்ல பொறி துப்பாக்கி! சிக்கிய நபருக்கு ரூ.3.1 இலட்சம் அபராதம்!

Date:

காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைத்ததுடன், அனுமதிப்பத்திரமற்ற துப்பாக்கி வைத்திருந்த நபருக்கு 3 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

கஹட்டகஸ்திகிலிய பிரதேச செயலகப் பிரிவிலுள்ள கொக்கேபே வனப்பகுதியின் எல்லையில் கடந்த ஒக்டோபர் 24ஆம் திகதி வனவிலங்கு அதிகாரிகள் மேற்கொண்ட ரோந்துப் பணியின்போது சந்தேகநபர் கைது செய்யப்பட்டார்.

தனியார் காணியொன்றின் எல்லையில் காட்டு யானையைத் தாக்கும் நோக்கில் பொறி துப்பாக்கி அமைக்கப்பட்டிருந்ததாக வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்போது துப்பாக்கியைக் கைப்பற்றிய அதிகாரிகள், சந்தேகநபரையும் கைது செய்து, ஒக்டோபர் 25ஆம் திகதி கஹட்டகஸ்திகிலிய நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதனையடுத்து, சந்தேகநபருக்கு நீதிமன்றம் 310,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

காட்டு யானை தாக்கியதில் இராணுவ சார்ஜென்ட் உயிரிழப்பு

அம்பாறை புறநகர்  பகுதியில் காட்டு யானை தாக்கியதில் இராணுவ வீரர் உயிரிழந்துள்ளதாக...

நீதவான் இடமாற்றங்களுடன் அரசாங்கத்திற்கு தொடர்பில்லையாம்!

நீதித்துறை அதிகாரிகளின் இடமாற்றங்கள், ஒழுங்கு நடவடிக்கை நடவடிக்கைகள் அல்லது அவர்கள் தொடர்பான...

‘போவோமா ஊர்கோலம்’: விபத்தில் 3 பேர் பலி… பயணத்தில் பதிவேற்றிய ரிக்ரொக் வீடியோ!

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் வரக்காப்பொல, மாஹேன பகுதியில் நேற்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்