ஏறாவூரில் பொது சுகாதார பரிசோதகரை பழிவாங்க அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருளை மறைத்து வைத்த இருவர் கைது

Date:

ஏறாவூரில்   உணவக உரிமையாளர் ஒருவர் பொது சுகாதார பரிசோதகர் ஒருவரை பழிவாங்க வேண்டி அவர் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளில்  போதைப்பொருளை மறைத்து வைக்க செய்த அடியாட்கள் இருவரை இருவரை இன்று வெள்ளிக்கிழமை (30) கைது செய்துள்ளதாக ஏறாவூர் பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

செங்கலடி பொது சுகாதார பணிமனையின் கீழ் உள்ள ஏறாவூர் 4 ம் பிரிவு பிரதேசத்தில் கடமையாற்றி வரும் பொது சுகாதார பரிசோதகர் அந்த பகுதியில் உள்ள உணவகங்களின்  சுகாதாரம் தொடர்பாக பரிசோதித்து வந்துள்ளார்.

இதன் போது சுகாதாரமற்ற உணவகம் ஒன்றுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுத்துள்ளார். இந்த நிலையில் குறித்த சுகாதார பரிசோதகரை எப்படியாவது பொலிசார் கைது செய்ய வைத்து வேலை இல்லாமல் செய்து பழிவாங்க வேண்டும் என குறித்த உணவக உரிமையாளர் திட்டமிட்டு இரு அடியாட்களுக்கு ஆலோசனை வழங்கி பணம் வழங்கி கொண்டார்.

இதனடிப்படையில் குறித்த இரு அடியாட்களும்  குறித்த பொது சுகாதார பரிசோதகரை கண்காணித்து வந்த நிலையில்  சம்பவ தினமான 26 ம் திகதி ஏறாவூர் 4ம் பிரிவிலுள்ள பாடசாலை வீதியில் உள்ள கிளினிக் நிலையத்துடன் இருக்கும் அவரது காரியாலயத்தின் முன்னாள் வீதியில்  மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு காரியாலயத்தில் கடமையாற்றி வந்துள்ளார்.

இதன் போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்று அவரின் மோட்டார் சைக்கிளில் ஜஸ் போதைப் பொருள் கொண்ட  3 பக்கற்றுக்கள் ஒளித்து வைத்து சலோப்ரோப்பினால் ஒட்டியுள்ளனர்.

இதையடுத்து அவர் வீதியில் நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை காரியாலய பகுதிக்கு   கொண்டு சென்ற நிறுத்திவிட்டு காரியாலய கதிரையில் இருந்து கொண்டு மோட்டார் சைக்கிளை பார்த்தபோது அதில் கீழ் பகுதியில் ஏதோ ஓட்டப்பட்டிருப்பதை கண்டு கொண்டதையடுத்து அங்கு சென்று பார்த்த போது அதில் சலோப் ரோப்பால் மூன்று சிறிய பக்கற்றுக்கள் ஒட்டப்பட்டிருப்பதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்தார்

இதனை தொடர்ந்து பொலிசார் சென்று பரிசோதித்த போது அது ஜஸ் போதைப் பொருள் என தெரியவந்ததையடுத்து பொலிசார் அந்த பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சி சி ரி கமராவை பரிசோதனை செய்தனர்.

இதன் போது அங்கு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் நிறத்தி வைத்திருந்த  பொது சுகாதார பரிசோதகரின் மோட்டார் சைக்கிளில் போதைப்பொருளை மறைத்து வைக்கும் வீடியோ காட்சிகளை கொண்டு விசாரணையில் அந்த நபர்களை கண்டறிந்து  அவர்களை இன்று கைது செய்து விசாரணையில் அவர்கள் உணவக உரிமையாளர் ஒருவர் பணம் வழங்கி செய்ய சொன்னதாக போலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

இதில் கைது செய்யப்பட்டவர்கள் ஏறாவூர் மீராகேணியைச் சேர்ந்த 46  வயதுடையவர் மற்றும் ஏறாவூர் 6ம் பிரிவைச் சேர்ந்த 32 வயதுடையவர்கள் எனவும் இவர்கள் இந்த சம்பவத்துக்கு பாவித்த மோட்டார் சைக்கிள் மீட்டுள்ளதுடன் போதைப் பொருளை யாரிடம் வாங்கியது போன்ற பல கோணங்களில்  விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை ஏறாவூர பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

முச்சக்கர வண்டி கவிழ்ந்து 4 பாடசாலை மாணவர்கள் காயம்!

ஹட்டன் - புளியாவத்தை பிரதான சாலையில், பி.டபிள்யூ. (P.W.) பகுதியில், மாணவர்கள்...

பெண் கொலை: தூக்கில் ஆணின் சடலம்!

புசல்லாவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொரகல, பகுதியில் பெண்ணொருவர் கூரிய ஆயுதத்தால் வெட்டி...

துடுப்பாட்ட தரவரிசையில் 16வது இடத்திற்கு முன்னேறிய பவன் ரத்நாயக்க

இலங்கைத் துடுப்பாட்ட வீரர் பவன் ரத்நாயக்க, சமீபத்திய ஐசிசி ஆடவர் ஒருநாள்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்