உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்ட யானைக் குட்டி பாதுகாப்பாக மீட்பு!

Date:

அனுராதபுரம், மடவாச்சியாவின் வெவல்கெட்டிய பகுதியில் உடல்நலக் குறைவுடன் காணப்பட்ட ஆண் யானைக் குட்டி, மேலதிக மருத்துவச் சிகிச்சைக்காக நேற்று (22) உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்திற்குப் பாதுகாப்பாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

வனவிலங்கு பாதுகாப்புத் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

குறித்த யானைக் குட்டிக்குத் தொடர்ச்சியான மருத்துவப் பராமரிப்பை வழங்கும் நோக்கில், அது உடவளவை யானைகள் பராமரிப்பு நிலையத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையில், கிரித்தலை வனவிலங்கு கால்நடை மருத்துவப் பிரிவின் பிராந்திய கால்நடை மருத்துவர் டாக்டர் சமீர கலிங்கு ஆராச்சி உள்ளிட்ட வனவிலங்கு அதிகாரிகள் குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.

யானைக் குட்டியின் உடல்நிலையை மேம்படுத்துவதற்கும், அதற்குத் தேவையான தொடர்ச்சியான மருத்துவச் சிகிச்சைகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

லங்கா ஐ.ஓ.சி பெற்றோல் விலையை அதிகரித்தது!

நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லங்கா ஐ.ஓ.சி 95 ஒக்டேன்...

மாத்தறையில் மீட்கப்பட்ட பெருந்தொகை போதைப்பொருளின் பின்னணி!

மாத்தறை, தலல்ல, நா-ஒதுன்ன கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட, சுமார் 11.8 பில்லியன்...

பொலிஸ் காவலில் உயிரிழந்த இளைஞன்: உறவினர்கள் குற்றச்சாட்டு!

போதைப்பொருள் தொடர்பான விசாரணை ஒன்றின் பேரில் கைது செய்யப்பட்ட 29 வயதுடைய...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்