மட்டக்களப்பு கடற்படையின் விசேட நடவடிக்கையில் கடலில் 2 கோடி ரூபா பெறுமதியான 4 சட்டவிரோத சுருக்குவலை மீட்பு —

Date:

மட்டக்களப்பு கடற்படையினர் சட்டவிரோத சுருக்கு வலைகளை தேடி விசேட நடவடிக்கையின் போது  2 கோடி ரூபா பெறுமதியான 4 சுருக்கு வலைகளை கடலில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை (20) மீட்கப்பட்டு வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம் மற்றும் கல்லடி கடற்படை முகாமிற்கு கொண்டுவரப்பட்டு மட்டக்களப்பு கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்திடம் ஒப்படைத்துள்ளதாக மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பு தெரிவித்துள்ளது

மட்டக்களப்பு கடலில் சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன்பிடிக்க பட்டு வருவதால் மீன்வளம் அழிவடைந்து வருவதாக சட்டவிரோத சுருக்கு வலையை  தடை செய்ய கோரி கடந்த இரு தினங்களுக்கு முன்னாள் மட்டக்களப்பு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்காக அமைப்பின் ஏற்பாட்டில் மாவட்ட கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்துக்கு முன்னாள் மீனவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து குறித்த அமைப்பினர் கடற்படையின் உயர் அதிகாரிகளை சந்தித்து இந்த சட்டவிரோத சுருக்குவலை தொடர்பான தகவல்கள் மற்றும் அனுசரணைகளை வழங்கியதையடுத்து கடற்படையின் விசேட நடவடிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (20) கல்லடி கடற்படை முகாம் பொறுப்பதிகாரி தலைமையில் கடற்படை குழுவினர் காலை 9.00 மணிக்கு காத்தான்குடி தொடக்கம் மாங்காடு வரையிலான கடற் பரப்பில் சோதனை நடவடிக்கை ஓன்றை ஆரம்பித்தனர்.

இதன் போது சட்டவிரோத சுருக்குவலை 4 கைப்பற்றி மீட்டு கல்லடி கடற்படை முகாமிற்கு மற்றும் வாழைச்சேனை மீன்பிடி துறைமுகத்திற்கு கொண்டு சென்று அந்தந்த பகுதியில் உள்ள கடற்றொழில் நீரியல் வள திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளதாக அமைப்பினர் தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

யாழ். இணுவில் சந்தியில் கோர விபத்து! துவிச்சக்கர வண்டியில் சென்ற 67 வயதுடையவர் பலி

யாழ்ப்பாணம் - இணுவில் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் சம்பவ...

நெல் வயலில் விழுந்து உயிருக்குப் போராடும் 15 வயது காட்டு யானை

கிழக்கு வனவிலங்கு மண்டலம்  அம்பாறை வனவிலங்கு அலுவலகத்தின் கீழ் உள்ள வளத்தாப்பிட்டி...

உணவக உரிமையாளர் மரண வழக்கு: மாடல் ஷ்ரத்தா உள்ளிட்ட 3 பேர் கைது

உத்தர பிரதேச மாநிலம் லக்​னோ​வில் உணவக உரிமையாளர் சிவா சர்மா (28)...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்