யாழ் மாவட்ட செயலகத்தின் முன் வேலையற்ற பட்டதாரிகள் போராட்டம்

Date:

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக வடக்கு மாகாண வேலையில்லா பட்டதாரிகள் இன்று கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது பொலிஸார் குவிக்கப்பட்டு மாவட்ட செயலக பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

போராட்டத்தில் ஈடுபட்ட பட்டதாரிகள் கருத்து தெரிவித்த போது,
நடைபெற்று முடிந்த பரீட்சை தொடர்பிலும் அதனை அடுத்து வெளியிடப்பட்ட நேர்முகத்தேர்வு பெயர் விபரங்கள் தொடர்பிலும் வேலையற்ற பட்டதாரிகளின் அடிப்படை உரிமைகள் முழுவதுமாக மீறப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த பட்டியல் எத்தகைய அடிப்படையில் வெளியிடப்பட்டது என்பதை வைத்து நாம் முழுவதுமாக புறக்கணிக்கப்பட்டுள்ளோம் என்பது புலனாகிறது. குறிப்பாக அரசேவையில் உள்ள பட்டதாரிகள் பெருவாரியாக பாடவாரியாகவும் மாகாண வாரியாகவும் அதிகமாக உள்ளீர்க்கப்பட்டிருப்பது எம்மை முழுவதுமாக ஏமாற்றும் செயற்பாடாக அமைவதுடன் அது அனைத்து வேலையற்ற பட்டதாரிகள் மத்தியில் பாரிய அதிருப்தியை ஏற்படுத்தியது.

எனவே இது தொடர்பாக நீதி கேட்பது எமது கடமையாகும். எனவே குறித்த பரீட்சை புள்ளிகளின் நியாயமான முறையையும் அத்தோடு அரச சேவை பட்டதாரிகள் மற்றும் வேலையற்ற பட்டதாரிகள் சரிசமமாக அதாவது 50க்கு 50 என்ற விகிதத்தில் உள்ளீர்க்கப்பட வேண்டும் என்பதையும் இது தொடர்பான நியாயமான சட்டவலுவிற்குட்பட்டு நடவடிக்கை எடுப்பது தொடர்பாக வடமாகாணம் தழுவிய வேலையற்ற பட்டதாரிகள் சங்கம் முனைந்து வருகிறது.
இந்நிலையில் குறித்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தை நடத்தியதாக தெரிவித்தனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்