மடு விபத்தில் ஒருவர் பலி

Date:

மன்னார் – மடு பிரதான வீதியில் இன்று (18) அதிகாலை 5.45 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மூவர் காயமடைந்துள்ளனர்.

நீர்கொழும்பு பகுதியில் இருந்து நான்கு பேர் கார் ஒன்றில் மடுத் தேவாலயம் நோக்கிப் பயணித்த நிலையில், மடு தேவாலயத்திற்கு சில கிலோ மீற்றர் தூரத்திற்கு முன்பு வீதியை விட்டு விலகிய கார் மரம் ஒன்றில் மோதி இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் காயமடைந்த நான்கு பேரும் அருகில் உள்ள பெரிய பண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்ட நிலையில், பெண் ஒருவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து காயமடைந்த மூன்று பேரையும் மேலதிக சிகிச்சைக்காக பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் இருந்து நோயாளர் காவு வண்டி மூலம் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

உயிரிழந்த 55 வயதான பெண்ணின் சடலம், பெரியபண்டிவிரிச்சான் பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

சாரதியின் நித்திரை கலக்கத்தால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என கூறப்படுகிறது. சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்