மட்டக்களப்பில் மனைவியின் சகோதரியை 16 வயது சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த அத்தானுக்கு 10 வருட கடூழிய சிறைத்தண்டனை

Date:

மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் மனைவியின் சகோதரியான 16 வயது சிறுமி ஒருவரை 2015 ம் ஆண்டு பாலியல் துஷ்பிரயோகம் செய்த சிறுமியின் அத்தனான சந்திரன் சங்கீதன் என்பவருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமும் சிறுமிக்கு நஷ்ட ஈடாக 50 ஆயிரம் ரூபா செலுத்துமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று வெள்ளிக்கிழமை (16) தீர்ப்பளித்தார்.

குறித்த பிரதேசம் ஒன்றினைச் சேர்ந்த குறித்த சிறுமியை கடந்த 2015 ஜனவரி 15ம் திகதிக்கும் டிசம்பர் 31 ம் திகதிக்கும் உட்பட்ட காலத்தில் மாங்கேணி பிரதேசத்தில் வைத்து பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டார்

இவ்வாறு கைது செய்யப்பட்டவருக்கு எதிராக வாழைச்சேனை  பொலிசார் நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு விசாரணையின் பின்னர் 2023 ம் ஆண்டு  மேல் நீதிமன்றுக்கு மாற்றப்பட்டு குறித்த வழக்கு விசாரணை தொடர்ந்து இடம்பெற்று வந்த நிலையில் வழக்கு தொடுநர் சார்பில்  அரச சட்டவாதிகளான எஸ். அனுஷாங்கன் மற்றும் ரி..தர்சிகா ஆகியோர் ஆஜராகி வாதாடி வந்தனர்.

இந்த நிலையில் குறித்த நபர் குற்றவாளியாக கடந்த மாதம் செப்டம்பர் 18ம் திகதி (2026-9-18) மன்றில் இனங்காணப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை (16) தண்டனை தீர்ப்பு வழங்கும் திகதி அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் குறித்த நபருக்கு 10 வருட கடூழிய சிறைத் தண்டனையும் 5 ஆயிரம் ரூபா அபராதமாக செலுத்துமாறும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 50 ஆயிரம் ரூபா நஷ்டஈடு வழங்குமாறு மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி ரி.ஜே. பிரபாகரன் இன்று தீர்ப்பளித்தார்.

spot_imgspot_img

More like this
Related

இலங்கைக்கு பெருந்தொகை போதைப்பொருளை கடத்த முயன்ற விஜய் கட்சி பிரமுகர் சிக்கினார்!

இலங்கைக்கு கடத்துவதற்காக ரூ.135 கோடி மதிப்பிலான மெத்தம்பெட்டமைன் பதுக்கி வைத்திருந்த நாகையைச்...

‘மஹிந்தவுக்கு ஏவுகணை அடித்தால் எல்லாம் சரியாவிடும்’: எக்னொலிகொட வழக்கில் புலிகள் அமைப்பின் முன்னாள் உறுப்பினர் சாட்சியம்!

மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், ஜனாதிபதி பயணிக்கும் விமானத்தின் மீது...

ஷிராந்திக்கு பிணை!

‘சிரிலிய சவிய’ கணக்கு தொடர்பான விசாரணைகளுக்கு அமைய இலஞ்ச ஊழல் விசாரணை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்