119 குடும்பத்தினருக்குக் காணாமல் போனோர் அலுவலகத்தில் அழைப்பு: இதுவரை 11,000 பேரிடம் விசாரணை

Date:

காணாமல் போனவர்களின் பட்டியலில் இடம்பெற்றுள்ள 119 குடும்பத்தினர் காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்திற்கு (OMP) இன்று காலை அழைக்கப்பட்டுள்ளனர். இச்சந்திப்பின் போது, தசாப்த காலங்களாக உறவுகளைத் தொலைத்துவிட்டுத் தவிக்கும் குடும்பங்களின் பரிதவிப்பும், அலுவலகத்தின் ஊடாக மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளின் நிலைகளும் வெளிப்படுத்தப்பட்டுள்ளன.

“1990ஆம் ஆண்டு எட்டாம் மாதம் இரண்டாம் தேதி வீட்டைவிட்டு அழைத்துச் சென்றவர் அதன்பிறகு திரும்பவில்லை. கிடைக்கும் வரை நாங்களும் இந்த இடமெல்லாம் தேடித் திரிகிறோம். ஒரு முடிவுமே இல்லாமல் முப்பத்தி ஆறு வருஷமாக என் புருஷனைக் காணவில்லை” எனத் துயரம் நிறைந்த குரலில் பாதிக்கப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வேதனையைப் பகிர்ந்து கொண்டார்.

இந்நிகழ்வு தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தின் ஆணையாளர், சட்டத்தரணி வடிவேல் கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:

எமது அலுவலகத்திடம் சுமார் 25,000 பேரை உள்ளடக்கிய காணாமல் ஆக்கப்பட்டோரின் பட்டியல் உள்ளது.இரட்டைப் பதிவு போன்ற சரிபார்ப்புகளுக்குப் பின்னர் தற்போது எைகளிடம் 17,000 பேரின் தரவுகள் உள்ளன.இந்தப் 17,000 பேரில் இதுவரை ஏறக்குறைய 11,000 பேரிடம் முதற்கட்ட விசாரணைகள் நடத்தப்பட்டுள்ளன.முதற்கட்ட விசாரணைக்குப் பின்னர் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இடைக்கால நிவாரணமாக ரூபா 2 இலட்சம் வழங்கப்படுவதுடன், அவர்களுக்கு என்ன நடந்தது என்பதை கண்டறியும் தொடர் விசாரணைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதனிடையே, காணாமல் போன ஆட்கள் பற்றிய அலுவலகத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு சில நிறுவனங்களும் தனிநபர்களும் காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பத்தினரிடமிருந்து மூல ஆவணங்களைச் சேகரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து அலுவலகம் விடுத்துள்ள அறிக்கையில், OMP தனது பணிகளை முன்னெடுக்கும் போது பிறப்புச் சான்றிதழ், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் புகைப்படங்கள் உள்ளிட்ட ஆவணங்களின் சான்றுபடுத்தப்பட்ட பிரதிகள் அல்லது நிழற்படப் பிரதிகளை   மாத்திரமே சேகரிப்பதாகவும், பாதிக்கப்பட்டோரின் மூல ஆவணங்களை எவரும் வழங்குவதைத் தவிர்க்குமாறும் கடுமையாக எச்சரிக்கப்பட்டுள்ளது.

மேற்குறித்த நிகழ்வுகள் இரு நாட்களாக கல்முனை பிரதேச செயலாளர் அலுவலக  கேட்போர் கூடத்தில் வியாழன் மற்றும் வெள்ளி( இன்று) வரை நடைபெற்று வருவதுடன் பல்வேறு இடங்களில் இருந்தும் தமது உறவுகளை நாட்டில் ஏற்பட்ட கடந்த கால அசாதாரண காலகட்டத்தில் குடும்ப உறவுகளை  இழந்த உறவுகள் கலந்து கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இன்று முதல் மின்வெட்டு

நாடளாவிய ரீதியில் இன்று (19) முதல் எதிர்வரும் மூன்று நாட்களுக்கு மின்...

அக்குறணை விபத்தில் 4 பேர் பலி

அக்குறணை, குருகொட சந்திக்கு அருகில் இடம்பெற்ற துரதிர்ஷ்டவசமான சாலை விபத்தொன்றில் நான்கு...

செம்மணி இடைக்கால அறிக்கை தாக்கல்: சோமரத்ன ராஜபக்ஷவிடம் மீண்டும் வாக்குமூலம்!

செம்மணி மனிதப் புதைக்குழி அகழ்வு நடவடிக்கைகள் தொடர்பில் குறித்த அகழ்வு பணிகளுக்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்