அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

Date:

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான மேலதிக விசாரணையை டிசம்பர் 16-ஆம் திகதிக்கு ஒத்திவைத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் இந்த மனுவைத் தாக்கல் செய்திருந்தார். நீதிபதிகள் மாயாதுன்ன கொரியா மற்றும் லக்மாலி கருணாநாயக்க ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற அமர்வு முன்னிலையில் நேற்று (12) இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

விசாரணையின் போது, ​​பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா சார்பில் ஆஜராகி வந்த சட்டத்தரணி சேனாநி தயாரத்ன, தான் வழக்கிலிருந்து விலகிக்கொள்வதாகவும், அதனால் வேறொரு சட்டத்தரணியை நியமிக்க கால அவகாசம் தேவை என்றும் கோரினார். இதற்குப் பதிலளித்த நீதிமன்ற அமர்வு, இது 2024-இல் தாக்கல் செய்யப்பட்ட மனு என்பதைச் சுட்டிக்காட்டியது. மனு மீதான விசாரணைக்கு நீண்ட கால அவகாசம் வழங்க முடியாது என்று குறிப்பிட்ட அமர்வு, மேலதிக விசாரணையை டிசம்பர் 16-ஆம் திகதிக்கு நிர்ணயம் செய்தது.

பிரதிவாதியான இராமநாதன் அர்ச்சுனா, அரச மருத்துவ அதிகாரியாகப் பணியாற்றியவாறே நாடாளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்ததாக மனுதாரர் குறிப்பிட்டுள்ளார்.

இச்செயல் அரசியலமைப்பை மீறும் செயல் என்று வலியுறுத்தியுள்ள மனுதாரர், பிரதிவாதி நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்படுவதற்கும், வாக்களிப்பதற்கும் மற்றும் நாடாளுமன்றத்தில் ஆசனம் வகிப்பதற்கும் தகுதியற்றவர் எனத் தீர்ப்பளிக்குமாறு கோரியுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

பௌத்த பிக்குகளின் ஆடை விவகாரத்தில் பணிந்தது அனுர அரசு!

சிறையில் உள்ள பௌத்த பிக்குகள் நீதிமன்றத்தில் ஆஜராவதற்கோ அல்லது பிற நோக்கங்களுக்காகவோ...

கிரியெல்லவின் கருத்திற்கு மனோ எதிர்ப்பு

கண்டியில் மகாநாயக்க தேரரைச் சந்தித்தபோது, ஐக்கிய மக்கள் சக்தியின் கட்சியின் சிரேஷ்ட...

23,006 ஆசிரிய23,006 ஆசிரியர் வெற்றிடங்கள்: முதற்கட்ட நேர்முகத் தேர்வுக்குத் தகுதி பெற்ற பட்டதாரிகளின் பட்டியல் வெளியீடு!

இலங்கை ஆசிரியர் சேவையில் நிலவும் 23,006 ஆசிரியர் வெற்றிடங்களுக்கான ஆட்சேர்ப்பின் முதற்கட்ட...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்