ஆசிரியை மதிவதனிக்கு நீதி கோரி வவுணதீவில் போராட்டம்

Date:

மட்டக்களப்பு திமிலைதீவு கனரக வாகனம் மோதிய விபத்தில் உயிரிழந்த ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோரி பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் கோரி வவுணதீவு பிரதேச செயலகத்தின் முன்னாள் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இன்று திங்கட்கிழமை (12) இடம்பெற்றது

நீதிக்கான மக்கள் குரல் அமைப்பின் தலைவரும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டது

இதன்போது குறித்த பிரதேச செயலகத்திற்கு முன்னால் இன்று பிற்பகல் 2.00 மணிக்கு ஆசிரியர்கள் பாடசாலை மாணவர்கள் வவுணதீவு பிரதேச சபை உறுப்பினர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் பொதுமக்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் ஒன்று திரண்டு கனரக வாகனங்களின் கட்டுபாடற்ற போக்குவரத்தை நிறுத்து மனித உயிர்களை காப்பாற்று, உயிரிழப்பு ஏற்படும் வரை காத்திருக்காதே இப்போதே நடவடிக்கை எடு.

பாதுகாப்பற்ற போக்குவரத்துக்கு முற்றுப்புள்ளி வை, மாணவர்களின் பாதுகாப்பை உறுதிபடுத்து, உயிரை காப்பது அரசின் கடமை பாதுகாப்பை உறுதிப்படுத்து. மாணவர்கள் செல்லும் பாதையில் மரண வாகனங்கள் வேண்டாம், அதிகாரிகளே மக்களின் குரலை செவிமடுங்கள்,  மக்களின் உயிருடன் விளையாடாதே, உயிரிழந்த ஆசிரியை மதிவதனிக்கு நீதி வேண்டும். சட்டவிரோத மண் அகழ்வை உடன் நிறுத்து என சுலோகங்கள் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பி ஒரு மணித்தியாலம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதனை தொடர்ந்து ஆசிரியை மதிவதனி கமலநாதன் மரணத்திற்கு நீதி கோருதல் மற்றும் மண்முனை மேற்கு பிரதேசத்தில் மணல் அகழ்வு நடவடிக்கைகளையும் கனரக வாகனப் போக்குவரத்தையும் ஒழுங்குபடுத்தி, பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு  எனும் தலைப்பிலான மகஜர் ஒன்றை வவுணதீவு பிரதேச செயலாளரிடம் கையளித்த பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள்  அங்கிருந்து கலைந்து சென்றனர்

spot_imgspot_img

More like this
Related

தமிழ் எழுத்தாளரின் புத்தங்களை விடுவிக்குமாறு சுங்கத்துறைக்கு பரிந்துரைத்தது மனித உரிமைகள் ஆணைக்குழு

இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட தமிழ் எழுத்தாளர் பி. பிரதீபனின் இரண்டு புத்தகங்களை...

ஹிஜாப் மீதாத தடையால் கல்முனை வைத்தியசாலை முஸ்லிம் ஊழியர்களின் உரிமை மீறப்பட்டுள்ளது: மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்ப்பு

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் கடமையின் போது தலைக்கவசம் (ஹிஜாப்) மற்றும்...

கைதான சாமர சம்பத் எம்.பி மீதான குற்றச்சாட்டு இதுதான்!

இலஞ்ச அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு, முன்னாள் இராஜாங்க அமைச்சர்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்