ஏறாவூரில் போதைப்பொருள் ஒழிப்பு குழு மீது பரபரப்பு குற்றச்சாட்டு “அப்பாவி இளைஞர்களை போதைப்பொருளுடன் கைது செய்ய முயற்சி”

Date:

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அனஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருள் ஒழிக்கும்  குழு என்ற பெயரில் போதைப்பொருள் மாபியாக்களுடன் இயக்கி வரும் குழு அப்பாவி இளைஞர்களுக்கு போதை பொருளை வைத்து  கைது செய்து வரும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது  என  பாதுகாப்பு படைகளுக்கு நீண்ட காலமாக இரகசிய தகவல் வழங்கி வரும் ஏறாவூரைச் சேர்ந்த செய்யது முகமது பளீல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு வொய்ஸ் ஒப் மீடியாவில் இன்று வியாழக்கிழமை (1) இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

நான் நீண்டகாலமாக இராணுவம் பொலிஸ், விசேட அதிரடிப்படை  மற்றும் பாதுகாப்பு படையினருக்கு போதை பொருள் விற்பனை செய்பவர்கள் தொடர்பான இரகசிய தகவல்களை வழங்கி வருகிறேன்.

ஏறாவூர் பிரதேசத்தில் இராணுவ மேஜர் அன்ஸ் என்பவர் தலைமையில் போதைப்பொருளை ஒழிக்கும் குழு என்ற பெயரில் ஒரு குழுவை இயக்கி வருகின்றார்  இதில் அதிகமானோர் போதைப்பொருள் பாவனையாளர்கள் இவர்களில் பலர்  போதை பொருள் மாபியாக்களுடன் சேர்ந்து போதை பொருளை அப்பாவி இளைஞர்களிடம் வைத்து அவர்களை கைது செய்ய வைத்து வருகின்றனர்.

இவ்வாறு மேஜர் அனஸ் குழுவின் செயல்பாடு தொடர்பாக நான்; தகவல்களை வழங்கி வருவதால் அனஸ் குழுவினர் என்னை ; பாதுகாப்பு படைகளுக்கு இரகசிய தகவல்களை வழங்க கூடாது இராணுவ மேஜர் தான் இங்கு போதை பொருள் தொடர்பாக தகவல்களை வழங்க வேண்டும் என முடிவு எடுத்துள்ளதாக அந்த குழுவினர்கள் என் மீது அழுத்தங்களை ஏற்படுத்தி வருகின்றனர்.

இவ்வாறான நிலையில் அண்மையில் அவருடைய குழுவுடன் வந்த இராணுவ மேஜர் அனஸ் அப்பாவி இளைஞர் ஒருவரை போதை பொருள் வைத்து பிடிப்பதற்காக வந்த போது அதனை நான் தடுக்க முற்பட்ட என் மீது மோட்டார் சைக்கிள் தலை கவசத்தால் தாக்கினார்.

இது தொடர்பாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ததுடன் மின்னேரியா இராணுவ முகாமிற்கு முறைப்பாடு செய்துள்ளேன் இருந்தபோதும்  என்னை தாக்கிய மேஜர் மீது பொலிசார்  எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.

அதேவேளை  எனக்கு இன்று வரை பொலிஸ் நிலையத்தில் நீதிமன்றத்தில் எந்தவிதமான முறைப்பாடும் இல்லாத என்னை ஜஸ் போதைப் பொருள் அல்லது குண்டுகள், அல்லது  துப்பாக்கி வைத்து கைது செய்வேன் என இராணுவ மேஜர் அனஸ் தலைமையில் இயங்கி வரும் குழுவினர் என்னை மிரட்டி வருகின்றனர்.

நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் இராணுவ முகாமில் இருந்து தான் போதை பொருள் வருகின்றதாக அண்மையில் ஊடகங்கள் ஊடாக தெரிவித்தார். எனவே இராணுவ மேஜர் அனஸ் அவ்வாறு செயற்படுகின்றாரா? என சந்தேகம் ஏற்பட்டுள்ளது காரணம் கொழும்பில் கடமையாற்றி வரும் இவர்  அடிக்கடி லீவில் வீட்டிற்கு வரும் போது தான் இங்கு இவ்வாறான சம்பவங்கள் அதிகமாக நடக்கிறது எனவே உரிய அதிகாரிகள் இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அட்டாளைச்சேனையில் மாணவிகளை துன்புறுத்தியதாக விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

ஆபாசக் காணொளிகளைக் காட்டி கலாசாலை மாணவிகளுக்கு பாலியல் தொல்லை: 55 வயது விரிவுரையாளர் கைது

அம்பாறை மாவட்டத்தில் அமைந்துள்ள அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சி கலாசாலையின் பயிற்சி மாணவிகளுக்கு...

விமல் வீரவன்சவிடம் வாக்குமூலம் பதிவு

நீதிமன்ற அவமதிப்புக்கு வழிவகுக்கும் வகையிலான கருத்தை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பான...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்