இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி முகாமைத்துவ, வணிக பீடத்துக்கு விஜயம்!

Date:

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்துக்கு, யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாய்முரளி நேற்று புதன்கிழமை காலை உத்தியோகபூர்வ  விஜயம் ஒன்றினை மேற்கொண்டார்.

யாழ். பல்கலைக்கழகத் துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பி மற்றும் பீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீப்காந் தலைமையிலான குழுவினர் இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ்.சாய்முரளி மற்றும் தூதரக அதிகரி ஶ்ரீ நாகராஜன் ராமஸ்வாமி ஆகியோரை வரவேற்றனர்.

இந்திய – இலங்கை அறக்கட்டளை (India-Sri Lanka Foundation)யின் கீழ், யாழ். பல்கலைக்கழக முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடம் பெற்றுக்கொண்டுள்ள கல்விசார் பரிமாற்றச் செயற்றிட்டத்துக்கான கடிதத்தை இந்திய துணைத் தூதுவர் ஶ்ரீ எஸ். சாயிமுரளி, துணைவேந்தர் சிரேஷ்ட பேராசிரியர் தி.வேல்நம்பியிடம் வைபவ ரீதியாகக் கையளித்ததுடன், பீடத்தின் சார்பில் முன்மொழியப்பட்டுள்ள செயற்றிட்ட விபரங்களைப் பீடாதிபதி பேராசிரியர் பி.பிரதீப்காந்திடமிருந்து பெற்றுக் கொண்டார்.

முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்தின் துறைத்தலைவர்கள், விரிவுரையாளர்கள் மற்றும் பணியாளர்களுடன் மேற்கொள்ளப்பட்ட கலந்துரையாடலைத் தொடர்ந்து, துணைத் தூதுவர் முகாமைத்துவ கற்கைகள் மற்றும் வணிக பீடத்திலுள்ள உட்கட்டமைப்பு வசதிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேல் சென்ற விமானத்தை நடு வானில் கவிழ்க்க முயற்சி?

துபாயிலிருந்து இஸ்ரேலின் டெல் அவிவ் நகரை நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த ஃப்ளைதுபாய்...

எரிபொருள் விலைகள் எகிறின!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும்...

திலீபன் சிலை விவகாரத்தில் அரசின் நிலைப்பாடு தெளிவானது – டக்ளஸ்

திலீபனின் சிலை விவகாரம் தொடர்பில் அரசாங்கம் தனது நிலைப்பாட்டை தெளிவாக வெளிப்படுத்தியுள்ளதாக...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்