மட்டக்களப்பில் ஏட்டிக்குப்போட்டியாக திலீபன் நினைவு நிகழ்வு

Date:

தியாகதீபம் திலீபன் அவர்களின் 39ஆம் ஆண்டு நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் ஒரே வளாகத்தில் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவு தூபிக்கு முன்பாகவும், காந்தி சிலைக்கு அருகிலுமாக இரு கட்சிகள் தனித்தனியான நினைவேந்தல் செய்தனர்.

காந்தி பூங்காவில் அமைந்துள்ள படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர்கள் நினைவுத்தூபி க்கு முன்பாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஷ் தலைமையில் நடைபெற்ற நினைவேந்தலில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா. அரியநேத்திரன், தமிழரசு கட்சி முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மா. நடராசா, செங்கலடி பிரதேச சபை தவிசாளர் முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தின் தலைவி திருமதி அ. அமலநாயகி, மாநகரசபை உறுப்பினர் ஜெயந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது தியாக தீபம் திலீபனின் திருவுருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து தீபச்சுடரேற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர் இதனை தொடர்ந்து தொடர்ச்சியாக நினைவுப் பேருரையும் இடம்பெற்றது.

அதேவேளை, காந்தி பூங்காவிலுள்ள மகாத்மா காந்தியின் உருவச் சிலைக்கு அருகில், மட்டக்களப்பு மாநகரசபை மாவட்ட சிவில் சமூக அமைப்புகள் இணைந்து முதல் முறையாக தியாக தீபம் திலீபனின் 39 வது மற்றொரு நினைவேந்தல் மட்டு மாநகர முதல்வர் சிவம் பாக்கியநாதன் தலைமையில் நடைபெற்றது

இந்த நினைவேந்தலில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.சிறிநேசன் வைத்தியர் இ. சிறிநாத், முன்னாள் மாநகர முதல்வர் சரவணபவன், பிரதேச சபை தவிசாளர்கள், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் பலர் பங்கேற்றனர்.

மட்டக்களப்பு காந்தி பூங்காவில் வழக்கமாகத் தமிழ் தேசிய மக்கள் முன்னணியினரால் நடத்தப்பட்டு வரும் இந் நினைவேந்தல் நிகழ்வுக்கு போட்டியாக, மாநகரசபையினர் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் இணைந்து இம்முறை தனியாக நினைவேந்தல் ஏற்பாடு செய்து ஏட்டிக்கு போட்டியாக நடத்தியமை குறித்து புத்திஜீவிகள் மற்றும் பல்வேறு தரப்பினரிடையே விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

மஹிந்த மீது குற்றப்பத்திரிகை இல்லை

'அரகலய' போராட்டக் காலத்தின்போது, ​​காலி முகத்திடலில்  அமைக்கப்பட்டிருந்த 'கோட்டாகோகம'  போராட்டக் களத்தில்...

திருமணம், தனியார் விருந்துக்கு டிஜே இசைக்கான உரிமக் கட்டணங்கள் தற்காலிகமாக நிறுத்தம்

இலங்கை படைப்பாளர்கள் மற்றும் வெளியீட்டாளர்கள் சங்கம், தனது உறுப்பினர்களின் மேலதிக முடிவுகள்...

பணம், நகைகளை காட்டி ரீல்ஸ் வெளியிட்ட பெண் யூடியூபர் வீட்டில் 118 பவுன் திருட்டு

நாகர்கோவில் அருகே பணம், நகைகளை குவியலாக காட்டி, ரீல்ஸ் வெளியிட்ட பெண்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்