வீடொன்றில் நள்ளிரவில் தீப்பரவல்: மோட்டார் சைக்கிளும் சேதம்

Date:

அம்பாறை மாவட்டம், சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வளத்தாப்பிட்டி பளவெளிப் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் இன்று (23) நள்ளிரவு வேளையில் திடீர் தீப்பரவல் சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.

இத் தீப்பரவலின் காரணமாகக் குறித்த வீடு பகுதியளவில் தீக்கிரையாகி சேதமடைந்துள்ளதுடன், வீட்டின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளொன்றும் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை உறுதிப்படுத்தப்படாத நிலையில், சம்பவம் தொடர்பாகச் சம்மாந்துறை பொலிஸாருக்கு உடனடியாகத் தகவல் வழங்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்திற்குச் சென்ற சம்மாந்துறை பொலிஸார், தீ விபத்துக்கான காரணம் மற்றும் சேத விவரங்கள் குறித்த விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். பொலிஸாரின் மேலதிக விசாரணைகளின் பின்னரே தீப்பரவலுக்கான உண்மைப் பின்னணி தெரியவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்