விபத்தில் இளம்பெண் பலி

Date:

நுவரெலியாவுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் குழுவை ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதியதில், இளம் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக நானு ஓயா பொலிஸார் தெரிவித்தனர்; நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் அவர் உயிரிழந்தார்.

உயிரிழந்தவர் நானு ஓயா பகுதியைச் சேர்ந்த 34 வயதான குணசேகரம் திவ்யா என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இவ்விபத்து நேற்று முன்தினம் (19ஆம் திகதி) காலை 10:00 மணியளவில் ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியில் உள்ள நானு ஓயா ரயில்வே பாலத்திற்கு அருகில் இடம்பெற்றது.

வாகன சாரதியின் கவனக்குறைவான சாரதித்தன்மையே விபத்துக்குக் காரணம் என்றும், வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய இரண்டும் பலத்த சேதமடைந்தன என்றும் நானு ஓயா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் தெரிவித்தனர். சந்தேகத்தின் பேரில் வாகன சாரதி நானு ஓயா பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

spot_imgspot_img

More like this
Related

கொழும்பில் அபாயகரமான நிலையை எட்டிய காற்று மாசுபாடு! AQI 178 ஆக உயர்வு

கொழும்பில் நேற்று (நவம்பர் 17) காலை காற்று மாசுபாட்டின் அளவு ஆரோக்கியத்திற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்