எம்.பி. பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இராஜினாமா! கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட பதவியை மீண்டும் கட்சியிடம் ஒப்படைத்தார்

Date:

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியினால் அமானிதமாக வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் இன்று (14) உத்தியோகபூர்வமாக இராஜினாமா செய்துள்ளார்.

கட்சியினால் தமக்கு வழங்கப்பட்ட தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான குறித்த காலப்பகுதி நிறைவடைந்ததையடுத்து, அந்தப் பதவியை தொடர்ந்தும் வகிக்காமல் இராஜினாமா செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஶ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் அமானிதமாக வழங்கப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர் பதவியை, தமக்குரிய காலப்பகுதி நிறைவடைந்த பின்னர் மீண்டும் கட்சியிடம் அமானிதமாக ஒப்படைக்கும் வகையில் இந்த இராஜினாமா இடம்பெற்றுள்ளது.

இதன்மூலம், கட்சியின் தீர்மானத்திற்கும் அமானிதப் பொறுப்பிற்கும் மதிப்பளித்து, தமக்கு வழங்கப்பட்டிருந்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஸித் விலகியுள்ளார்.

அவரது இராஜினாமாவைத் தொடர்ந்து, குறித்த தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் தொடர்பில் கட்சியினால் தீர்மானிக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

spot_imgspot_img

More like this
Related

லண்டனில் திலீபன் நினைவேந்தல்: 12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டம் ஆரம்பம்

12 நாள் அரசியல் விழிப்புணர்வு செயற்திட்டத்தின் முதல் நாள் நிகழ்வு லண்டனில்...

அர்ச்சுனாவின் கூட்டாளிக்கு வந்த சந்தேகம்

எதிர்க்கட்சித் தரப்பில் உள்ளவர்கள் பிணையில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்திற்குரியவர்கள் என்று அரசாங்கம்...

அர்ச்சுனாவின் பைத்தியக்காரத்தனமான உளறலை விசாரிக்கிறது பொலிஸ்!

அனுராதபுரத்தில் நடைபெற்ற இலங்கை பொதுஜன பெரமுனவின் கூட்டுப் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய யாழ்ப்பாண...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்