பட்டிமன்ற நடுவரும், பேராசிரியருமான சாலமன் பாப்பையா மறைவு

Date:

மதுரையைச் சேர்ந்த தமிழ் ஆர்வலரும், பட்டிமன்ற நடுவருமான பேராசிரியர் சாலமன் பாப்பையா உடல்நலகுறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 90.

மாநகராட்சி பள்ளியில் படித்த சாலமன் பாப்பையா, மதுரை அமெரிக்கன் கல்லூரியில் தமிழ்த் துறை பேரராசிரியாக பணிபுரிந்தவர். மதுரை ஞானஒளிவு புரத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இனிய தமிழில் எல்லோரையும் கவரும் வகையில் நகைச்சுவையாக பேசுவதில் அவர் திறமை வாய்ந்தவராக இருந்தார்.

சமூகத்திலும, ஒவ்வொருவரது வீடுகளிலும் நடக்கும் நிகழ்வுகளை மையமாகக் கொண்டு பட்டிமன்றங்களை சுவாரசியமாக நடத்துவதில் வல்லவர். பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, கடல் கடந்தும் தமிழ் மொழியை வளர்த்தவர்.

பேச்சாற்றலால் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்த சாலமன் பாப்பையா, சில திரைப்படங்களிலும் நடித்து மக்கள் மனதை கவர்ந்தார்.

இந்திய அரசின் நான்காவது மிக உயரிய விருதான பத்மஸ்ரீ விருது 2021-ஆம் ஆண்டு இவருக்கு வழங்கப்பட்டது.

நெஞ்சு வலி காரணத்தால் மதுரையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார்.

அவரது மறைவுக்கு தமிழ் ஆர்வலர்கள், முக்கிய அரசியல் கட்சித் தலைவர்கள், பொதுமக்கள் என பலரும் தங்கள் இரங்கலைப் பதிவு செய்து வருகிறார்கள்.

spot_imgspot_img

More like this
Related

ஈரான் இரசாயன ஆயுதங்களை தயாரிக்கிறது: அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்த இஸ்ரேல்

ஈரான் தனது எதிரிகளுக்கு எதிராக இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராகி வருவதாகக்...

திருமலை துப்பாக்கிச்சூட்டின் பின்னணி!

திருகோணமலை, கப்பல்துறை பகுதியில் கடந்த முன்தினம் (2-ஆம் திகதி) இரவு நடத்தப்பட்ட...

உடல்நிலை காரணமாக மஹிந்தவின் மாமி ஊழல் வழக்கிலிருந்து விடுவிப்பு

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் புதல்வரான யோஷித ராஜபக்ஷவுக்கு எதிராக, மூன்று...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்