தனது மனைவியின் தங்கையான 15 வயது பாடசாலை மாணவியை வன்புணர்வு செய்த இராணுவ சிப்பாய் ஒருவரை கல்லஞ்சிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
24 வயதான இராணுவ சிப்பாய் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சிறுமி தனது தாய் வெளிநாடு சென்றிருந்தமையினால் தனது மூத்த சகோதரியுடன் (சந்தேக நபரின் மனைவி) தனது வீட்டில் தங்கியிருந்த போதே இந்த குற்றச் செயலுக்கு முகம் கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேகத்திற்குரிய இராணுவச் சிப்பாய் விடுமுறையில் வீடு திரும்பிய வேளையில் இந்தக் குற்றச் செயல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் ஆரம்பகட்ட விசாரணைகளின் போது தெரியவந்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரான இராணுவ சிப்பாய் அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.




