நெல்லியடி நகரில் உள்ள இளைப்பாறிய அரச உத்தியோகத்தரின் வீட்டிற்குள் மதுபோதையில் அத்து மீறி நுழைந்து வீடு மற்றும் சொத்துக்களை சேதப்படுத்திய வடமராட்சி தெற்கு மேற்கு (கரவெட்டி) பிரதேச சபையின் தேசிய மக்கள் சக்தி உறுப்பினரான கணேசருபன் மற்றும் அவரது நண்பர்கள் சிலர் நெல்லியடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இன்று அதிகாலை 12 மணியளவில் நெல்லியடி நகர் பகுதியில் உள்ள அரச உத்தியோகத்தர்களான குடும்பத்தினரின் வீட்டிற்குள் நிறைவெறியில் நுழைந்த தேசிய மக்கள் சக்தி கட்சியின் பிரதேச சபை உறுப்பினரான கணேசரூபன் மற்றும் அவரது நண்பர்களான கள்ளமண் கடத்தல்காரர்கள் அந்த வீட்டின் கண்காணிப்பு கமராவினை உடைத்து வீட்டிற்குள் உட்புகுந்து வீட்டில் இருந்தவர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
இதனை தொடர்ந்து வீட்டின் உரிமையாளர் 119 எனும் அவசர பொலிஸ் இலக்கத்திற்கு முறைப்பாடு செய்த நிலையில் சம்பவ இடத்திற்கு வருகை தந்த நெல்லியடி பொலிஸார் தேசிய மக்கள் சக்தி பிரதேச சபை உறுப்பினர் மற்றும் அவரது நண்பர்களை கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தும் நடவடிக்கையை மேற்கொண்டனர்.




