எம்பிலிபிட்டிய காகித ஆலையின் வளாகத்தில் கழிவுப் பொருட்களை சேமித்து வைக்கும் கிடங்கில் இன்று (30) பிற்பகல் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
பிற்பகல் சுமார் 3.20 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து காகித ஆலையின் தீயணைப்புப் பிரிவு, இலங்கை இராணுவம், பொலிஸார், எம்பிலிபிட்டிய நகர சபை மற்றும் செவனகல சர்க்கரை ஆலையின் தீயணைப்புப் பிரிவினர் இணைந்து தீயை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
தீ மேலும் ஆலையின் பிற பகுதிகளுக்கு பரவாமல் தடுக்கும் வகையில் அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் பிரிவினர் ஒருங்கிணைந்து நடவடிக்கைகளை முன்னெடுத்தனர்.
நீண்ட முயற்சிக்குப் பின்னர் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
எனினும், தீ விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. இது தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.




