நெஞ்சில் கையடக்க தொலைபேசி வைத்து உறங்கிய இளைஞன் கையடக்க தொலைபேசி வெடித்து உயிரிழப்பு

Date:

கல்குடா கருங்காலிச்சோலை பகுதியில் கையடக்க தொலைபேசியை சார்ஜ் செய்தவாறு மார்பில் வைத்து கொண்டு உறங்கிய போது கையடக்க தொலைபேசி வெடித்ததில் 19 வயது இளைஞன் ஒருவர் பரிதாபகரமாக உயிரிழந்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை (27) மாலை 6.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக பாசிக்குடா பொலிசார் தெரிவித்தனர்.

கல்குடா கருங்காலிச்சோலை வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய கமலேஸ்வரன் சங்கீதன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்

குறித்த இளைஞன் சம்பவ தினமான நேற்று மாலை வீட்டில் உறங்குவதற்கு சென்ற நிலையில் அவரது கையடக்க தொலைபேசியை மின்சாரத்தின் ஊடாக சார்ஜ் செய்து கொண்டு கையடக்க தொலைபேசியை அவரது நெஞ்சில் இருதயம் இருக்கும் பகுதியில் வைத்து கொண்ட நிலையில் உறங்கி கொண்டுள்ளார்.

இந்த நிலையில் கையடக்க தொலைபேசியின் பற்றி சூடாகி வெடித்ததையடுத்து படுகாயமடைந்த அவரை வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற அனுமதித்தபோது அவர் ஏற்கனவே உயிரிழந்ததாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளதாக பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து உயிரிழந்தவரின் சடலம் பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கல்குடா பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

-கனகராஜா சரவணன்-

spot_imgspot_img

More like this
Related

பெருமளவு போதைப்பொருளுடன் அழகுநிலைய ஜோடி கைது!

மாத்தறையில் அழகு நிலையம் நடத்தி வரும் தம்பதியினர், சுமார் 7 கோடி...

நேபாள பெருவெள்ளம்: இதுவரை 359 பேர் உயிரிழப்பு; 800+ பேரை தேடும் பணி தீவிரம்

நேபாள வெள்ளப் பெருக்கில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 359 ஆக அதிகரித்துள்ளதாக அந்நாட்டு...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய இரதோற்சவம் கோலாகலம்! வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்