சிறையில் இறந்ததாக கூறப்பட்டவர் இறுதிச்சடங்கின் போது திடீரென வந்ததால் பரபரப்பு!

Date:

சிறையிலிருந்த ஒருவர் இறந்துவிட்டதாகப் பொலிஸாரால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டு, அவரது இறுதிச்சடங்குகளுக்காக அனைத்து ஏற்பாடுகளும் செய்யப் பட்டுக்கொண்டிருந்த வேளையில், இறந்துவிட்டதாகக் கூறப்பட்டவர் இறுதிச்சடங்கு வீட்டிற்கே உயிருடன் நடந்து வந்த விசித்திரமான சம்பவமொன்று கல்கமுவ, கொஹொபன்குளம் கிராமத்தில் நடந்துள்ளது..

கல்கமுவ, கொஹொபன்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த டி. எம். கீர்த்திசேன என்பவர், வாரியப்பொல சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த போது, சிறைச்சாலையினுள் இறந்துவிட்டதாக நான்னேரிய பொலிஸாரால் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் செய்தியினால் கடும் அதிர்ச்சியடைந்த உறவினர்களும் கிராம மக்களும் ஒன்றிணைந்து இறுதிச்சடங்கு நடவடிக்கைகளைச் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுத்திருந்தனர்.

கிராமம் முழுவதும் அஞ்சலிப் பதாகைகள் காட்சிப்படுத்தப்பட்டு, இறுதிச்சடங்கு வீட்டிற்குத் தேவையான பந்தல்கள் அமைத்தல் மற்றும் தகனக் கிரியைகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தருணத்தில், அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி கீர்த்திசேன உயிருடன் வீடு திரும்பியுள்ளார்.

தனக்காக ஆயத்தமாகிவந்த இறுதிச்சடங்கு வீட்டிற்கே கீர்த்திசேன வந்து சேர்ந்ததைத் தொடர்ந்து, முழு கிராமமும் பரபரப்பிலும் ஆச்சரியத்திலும் மூழ்கியது.

spot_imgspot_img

More like this
Related

சஷி வீரவன்சவின் தண்டனை 26ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

'சஷி வீரவன்ச' என்று அழைக்கப்படும் திருமதி ரணசிங்க முதியன்சலாகே ஷிர்ஜா உதயந்திக்கு...

அர்ச்சுனாவின் சட்டத்தரணி விலகல்

நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை செல்லாததாக்கக் கோரி...

ஒரே நீதிமன்ற வளாகம்… ஒரே நாள்… ஒரே குடும்பம்- மூவர் இன்று வழக்கில் முன்னிலை!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் மனைவி ஷிராந்தி ராஜபக்ஷ மற்றும் அவர்களது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்