யாழில் 14 வயது சிறுமியுடன் குடும்பம் நடத்திய 27 வயது இளைஞன் கைது!

Date:

யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்த 14 வயதுச் சிறுமியைக் கடத்திச் சென்று, பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கிய குற்றச்சாட்டில் 27 வயது இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கோப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் 14 வயதுச் சிறுமியைக் காணவில்லை என அவரது பெற்றோர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.

முறைப்பாட்டிற்கு அமைய விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், அச்சுவேலி பகுதியைச் சேர்ந்த 27 வயதான இளைஞரே சிறுமியைக் கடத்திச் சென்று தனது பாதுகாப்பில் வைத்துள்ளார் என்பதைக் கண்டறிந்தனர். அதைத் தொடர்ந்து, அந்த இளைஞரைக் கைது செய்த பொலிஸார் சிறுமியையும் மீட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இளைஞரைக் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்து வரும் பொலிஸ் துறையினர், சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

மட்டக்களப்பில் கசிப்பு வியாபாரிகளுடன் பொலிஸாருக்கு தொடர்பா? சிறையில் கைதிக்கு மெத்தை வழங்கியதாகக் குற்றச்சாட்டு!

மட்டக்களப்பு திராய்மடு பிரதேசத்தில் பெண் ஒருவரின் கையை பிடித்து இழுத்து பாலியல்...

கல்முனை வைத்தியசாலை ஆடை விவகார வழக்கு: நவம்பர் 2ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு

கல்முனை வைத்தியசாலையின் ஆடை விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிட்டமைக்கு வைத்தியர் டாக்டர்...

மட்டக்களப்பு நீதிமன்றில் எம்.பி அருச்சுணா, உட்பட 3 பேரை எதிர்வரும் நவம்பர் 2 ம்திகதி ஆஜராகுமாறு உத்தரவு —

கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் குணசிங்கம் சுகுணன். நாடாளுமன்ற...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்