நாடாளுமன்ற உறுப்பினர் பி ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லாவுக்கு எதிராக ஈரோஸ் கட்சி தலைவர் இரா. பிரபாகரன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு–

Date:

மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா கடந்த காலத்தில் ஓட்டமாவடி காளி கோவிலை இடித்தமை, நீதவானை இடமாற்றியது, தற்கொலை குண்டுதாரியான சஹ்ரானுடன் தொடர்பில் இருந்தது மற்றும் பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளார் அதற்கு  எதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரி மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் இன்று சனிக்கிழமை (22) முறைப்பாடு செய்துள்ளதாக ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் தெரிவித்தார்.

ஈரோஸ் கட்சி தலைவர் இராஜநாதன் பிரபாகரன் .இன்று சனிக்கிழமை (22) மட்டு  தலைமையக பொலிஸ் நிலையத்தில்  ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா எதிராக முறைப்பாடு செய்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கடந்த 1990ம் ஆண்டில் இருந்து ஏ.எல்.எம்.ஹிஸ்புல்லா இந்த கிழக்கு மாகாணத்திற்கு செய்த அநீதிகள் இரு சமூகங்களையும் பிரித்ததுடன் மட்டுமல்ல ஒன்றாக பின்னிப் பிணைந்து வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ் முஸ்லிம் சமூகங்கள் இன துவேசம் மூலம் பிளைவை ஏற்படுத்தி வரும் செய்யும் செயல்பாடு இன்று முற்றுப்பெறும்.

இவர் தொடர்பான சகல ஆவணங்களையும் இறுவெட்டு மூலமும் எழுத்து மூலமும், ஆவண புகைப்படங்களை மட்டு தலைமையக பொலிஸ் நிலையத்தில் வழங்கி முறைப்பாடு செய்துள்ளார்.

இதில் மட்டக்களப்பு நீதவான் மாற்றி தனக்கு சாதகமான நீதவானை கொண்டுவந்து உத்தரவு பிறப்பித்தது. மற்றது ஓட்டமாவடியில் இருந்த காளி கோவிலை இடித்து அதில் மீன் சந்தை மற்றும் பள்ளிவாசல் அமைத்துள்ளதாக அவரது வாயால் தெரிவித்துள்ளது தொடர்பாகவும் மற்றும் ஸஹ்ரானுடன் கைகோத்து ஒன்றாக இருந்து உறவு கொண்டாடி ஒரு மாதத்தின் பின்னர் தற்கொலை குண்டு தாக்குதல் இடம்பெற்றுள்ளது இவருக்கும் ஸகரானுக்கும் என்ன தொடர்பு என்பது தொடர்பாகவும்மாவட்டத்தில் அவர் அதிகாரத்தை வைத்து பல ஆயிரம் ஏக்கர் அரச காணிகளை சூறையாடியுள்ளது தொடர்பாக தீர்வை பெற்றுத் தருமாறு அந்த முறைப்பாட்டில் பதிவு செய்துள்ளேன் அதன்போது பொலிசார்  அதனை மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு விசாரணை செய்வார்கள் என தெரிவித்தனர்.

அதேவேளை இஸ்லாமிய மக்கள் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும் இது இஸ்லாமிய மக்களுக்கு எதிரானது அல்ல அவர்களை எப்போதும்  நேசிப்பவன் எனவே இது ஒரு தனிநபர் அராஜகத்துக்கு எதிரானது ஆகவே தமிழ் பகுதியிலும் இப்படியான அராஜகம் செய்த ஆதிக்கத்தை உடைத்துள்ளேன். அதே மாதிரியான ஒரு செயல்பாடுதான் இது இதனை இஸ்லாமிய மக்களுக்கு எதிரான செயற்பாடாக கருதவேண்டாம். என்றார்.

spot_imgspot_img

More like this
Related

பல்கலை, உயர்கல்வி நிறுவனங்களில் விடுதி வசதிகளை விரிவுபடுத்த திட்டம்

இன்று (08) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, 2026...

பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராக மனு!

அரசாங்கத்தால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட பயங்கரவாதத்திலிருந்து அரசை பாதுகாக்கும் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி...

மதுபானசாலைகளற்ற வலி வடக்கில் மதுபானசாலைக்கு அனுமதியா?” — வீதியில் இறங்கிய மக்கள்

மதுபானசாலைகளற்ற பிரதேசமாக காணப்படும் வலி வடக்கில் புதிய மதுபானசாலைக்கு அனுமதி வழங்கப்படுவதற்கு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்