வவுனியாவில் விபத்தை ஏற்படுத்திய பேருந்து சாரதி போதைப்பொருள் பாவித்திருந்தார்

Date:

வவுனியா, புளியங்குளம் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்து தொடர்பில், குறித்த பேருந்தின் உரிமையாளர் நேற்று (04) புளியங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த ஜூலை 31 ஆம் திகதி புளியங்குளம் பகுதியில் மோட்டார் சைக்கிள் மீது பேருந்து மோதியதில், அதில் பயணித்த முதியவர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இவ்விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், விபத்தை ஏற்படுத்திய பேருந்தின் சாரதியைக் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சாரதியிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், அவர் ஐஸ் போதைப்பொருளைப் பயன்படுத்தியிருந்தமை உறுதிப்படுத்தப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட தீவிர விசாரணைகளில், குறித்த நபரின் சாரதி அனுமதிப்பத்திரமும் ஏற்கனவே காலாவதியாகியிருந்தது கண்டறியப்பட்டது.

இதனையடுத்து, காலாவதியான சாரதி அனுமதிப்பத்திரத்தைக் கொண்டிருந்த மற்றும் போதைப்பொருள் பயன்படுத்திய ஒருவருக்குப் பேருந்தைச் செலுத்த அனுமதி அளித்த குற்றச்சாட்டின் கீழ், அப்பேருந்தின் உரிமையாளரைப் பொலிஸார் கைது செய்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைப் புளியங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன், சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

புகையிரதம் மோதி ஒருவர் பலி

யாழ்ப்பாணம் - அரியாலை புங்கன்குளம் பகுதியில் உள்ள புகையிரதத்துடன் மோதுண்டு ஒருவர்...

கொக்கட்டிச்சோலை கண்டியனாறு பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை 10 பெரல் கோடா மீட்பு

கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவிலுள்ள கண்டியனாறு குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்