சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் மாணவர்களுக்கு பரீட்சை செயலமர்வு

Date:

காரைதீவு பிரதேச சபையின் ஏற்பாட்டில், காரைதீவு பிரதேச சபை தவிசாளர் சுப்ரமணியம் பாஸ்கரன் அவர்களின் தலைமையில், காரைதீவு கோட்டத்திலுள்ள பாடசாலை மாணவர்களுக்கான தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை முன்னிட்டு சிறப்பு செயலமர்வு இன்று (04) சுவாமி விபுலானந்தர் கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது. எதிர்வரும் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையை வெற்றிகரமாக எதிர்கொள்ள மாணவர்களை தயார்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இச்செயலமர்வில், பரீட்சை தொடர்பான வழிகாட்டல்கள், வினாத்தாள் அணுகுமுறைகள், நேர முகாமைத்துவம், மதிப்பெண்களை அதிகரிக்கும் உத்திகள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து மாணவர்களுக்கு விரிவான விளக்கங்கள் வளவாளராக கலந்து கொண்டிருந்த பட்டிருப்பு தேசிய பாடசாலை ஆசிரியர் சீ. ஜெயானந்தன் அவர்களினால் வழங்கப்பட்டன. காரைதீவு கோட்டத்தின் காரைதீவு, மாளிகைக்காடு, மாவடிப்பள்ளி பிரதேச பல்வேறு பாடசாலைகளைச் சேர்ந்த தரம் ஐந்து மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்ட இந்நிகழ்வில், கல்வியாளர்கள் மற்றும் வளவாளர்களினால் மாணவர்களின் சந்தேகங்களுக்கு விளக்கங்கள் அளிக்கப்பட்டதுடன், பரீட்சையை தன்னம்பிக்கையுடனும் திட்டமிட்ட முறையிலும் எதிர்கொள்ளும் வகையில் பயிற்சிகளும் வழங்கப்பட்டன. நிகழ்வில் கல்முனை கல்வி வலய பிரதிக்கல்வி பணிப்பாளரும், காரைதீவு கோட்டக்கல்வி பணிப்பாளருமான ஏ. சஞ்சீவன், காரைதீவு பிரதேச சபை உப தவிசாளர் எம்.எச்.எம். இஸ்மாயீல், முன்னாள் தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான வை. கோபிகாந்த், முன்னாள் உப தவிசாளரும், தற்போதைய உறுப்பினருமான ஏ.எம். ஜாஹீர், உறுப்பினர்களான எம்.என்.எம். ரணீஸ், எஸ். குமார், கிருஸ்ணபிள்ளை செல்வராணி, சபை செயலாளர் திருமதி.வனிதா டேவிட் அமிர்தலிங்கம், சபை உத்தியோகத்தர்கள், ஆரம்ப பிரிவு ஆசிரிய ஆலோசகர் த. சிவநாதன், கல்வித்துறை அதிகாரிகள், அதிபர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

spot_imgspot_img

More like this
Related

மொட்டு செயலாளரின் மிரட்டலை சிஐடி விசாரிக்கும்

பொலிஸ் மா அதிபர் (IGP) குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP)...

ஈரான் போரின் போது அமெரிக்கா தனது நீண்ட தூர துல்லிய ஏவுகணைகள் ‘ஏறக்குறைய அனைத்தையும்’ பயன்படுத்தியுள்ளது

ஈரானுடனான தனது ஐந்தாண்டுப் போரின் போது, ​​அமெரிக்க இராணுவம் தனது கையிருப்பில்...

மூக்குடைபட்ட விஜய் அரசு: உதயநிதி ஸ்டாலினை இன்றைக்குள் விடுவிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

தஞ்சையில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் முதல்வர் விஜய் குறித்தும், பெண்கள் குறித்தும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்