தொல்லியல் ஊடாக தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை இந்த அரசு மிக நுட்பமான முறையில் பறித்தெடுத்து வருகின்றது– நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத்

Date:

வடகிழக்கில் தொல்லியல் ஊடாக சட்டரீதியாக என கூறப்படுகின்ற  வகையில் திட்டமிட்ட முறையில்  தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை பறித்தெடுத்து அவர்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையை மிக நுட்பமான முறையில் இந்த அரசு செய்து வருகிறது என நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இளையதம்பி சிறிநாத் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் இன்று திங்கட்கிழமை (03) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மிக முக்கியமாக சமகால அரசு பல வாக்குறுதிகளை தந்திருந்தது இருந்தபோதும் தமிழ் மக்களுக்கு அரசியல் உரிமை சம்மந்தமாக   இந்த அரசு  ஆட்சியை பொறுப்பேற்று ஒன்றரை வருடம் ஆகியும் இது  சம்பந்தமாக எந்த நடவடிக்கைகள் எடுக்கப்படாத ஒரு நெருக்கடியான சூழ்நிலை இருக்கிறது

அதற்கு அப்பால் தமிழ் மக்களுக்கு ஒரு பூரணப்படுத்தப்படாத தீர்வாக இருக்கின்ற விடயமாக இருந்தாலும் 13 வது திருத்தச்சட்டம் மூலம் கிடைத்த அந்த மாகாணசபை தொடராமல் அல்லது அது உறுதிப்படுத்தப்படாமல் இருக்கின்ற நிலைமை இருக்கிறது

இவ்வாறான சந்தர்ப்பத்தில் தமிழ் மக்களின் வாழ்வாதார பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துவதற்கு பல விடயங்கள் கூட இன்று பாரியளவில் கொண்டு செல்லப்படாமல் இருக்கிறது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக அண்மையில் மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டத்தில் பல விடயங்கள் முன்வைக்கின்ற முக்கியமாக கித்துள் முந்தனை ஆறு நீர் பாசன திட்டம் சம்பந்தமாக மாவட்டத்தில் அடிப்படையாக விவசாயம் பொருளாதாரத்தையும் அதோடு மீன்பிடி வெள்ள தடுப்பு நடவடிக்கை எதிர்கால குடிநீர்  தேவைகொண்டு செல்ல வேண்டிய திட்டம் ஒதுக்கப்பட்ட ஆய்வுகளுக்கான நிதியில் ஒரு வீதம் பயன்படுத்தப்பட்டதாக அறிக்கை காட்டப்பட்டது.

இது மிக மனவருத்தமான விடயம் அது மட்டுமல்ல அது சம்மந்தமாக கேள்வி எழுப்பி இருந்தோம் அதற்கு உரிய தீர்வுகள் முன்வைக்க ப்படவில்லைகால்நடையை கொண்ட மயிலத்தமடு மாதவனை  பகுதியில் அவர்களுக்கு மேய்ச்சல் தரையை விடுவிப்பதற்கான செயற்பாடுகள் கொண்டு நடைமுறைப்படுத்துவதற்கான ஜனாதிபதி தலைமையிலான கூட்டத்தில் உறுதி மொழி கொடுக்கப்பட்ட போதிலும் இன்னும் ஒரு மந்தகதியில் நடைபெற்று வருகின்றது

அதற்கு அப்பால் எமது மாவட்டத்திற்கு அப்பால் இருக்கிற பல பேர் தமிழ் மக்களின் காணிகளை கையகப்படுத்த மேய்ச்சல் தரையை கொடுக்க விடாது தடுக்கும் ஒரு நடவடிக்கையை காணக்கூடியதாக இருக்கின்றது

இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் இந்த மேய்ச்சல் தரையை பெற்றுக் கொள்ள கூட பல இடையூறு ஏற்படும் என எண்ணத் தோன்றுகின்றது இது தொடர்பாக ஒரு மிகப் பெரிய கலந்தாலோசனை செய்யப்பட்டு இதை விரைவு படுத்துவதற்கான வேலைத்திட்டத்தை செய்ய வேண்டிய தேவை இருக்கின்றது அதற்கான செயற்பாடுகளை செய்து வருகிறோம்.

கடல்சார் அபிவிருத்தியை கொண்டுவருவதற்கு களுவங்கேணி பகுதியில் ஒரு மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை கோரியிருந்தோம் அதற்கான நிதி ஆரம்ப காலங்களில் கொடுக்கப்படுவதாக உறுதியளிக்கப்பட்டிருந்தும் எமக்கு அறிவிக்கப்படாமல் பிரதேச அபிவிருத்தி கூட்டங்களில் உறுதிமொழி அளித்தனர் அதனை வேறு தேவைக்கு மாற்றப்பட்டதாக கடந்த மாவட்ட அபிவிருத்தி குழுவில் கூறப்பட்டது

இவ்வாறு மேய்ச்சல் தரை, விவசாயம், மீன்பிடித்துறை போன்றவற்றை அபிவிருத்தி செய்வதற்கான எந்த ஒரு சிறந்த திட்டமிடல் முறைமையும் இல்லாது தமிழ் மக்கள் மீது பல நெருக்கடிகளை கொண்டு வருகின்றனர்

செம்மணியில் கொல்லப்பட்ட ஒரு இனப்படுகொலை அடையாளமாக எடுக்கப்பட்ட  எலும்புக் கூடுகள் ஒரு ஆதாரமாக வலுப்படுத்தி தமிழ் மக்களுக்கு எதிரான கொடுமைகள் நடந்தது என்பதை உறுதிபடுத்துவற்கான செயற்திட்டங்கள் அதாவது டி .என் .ஏ பரிசோதனைகள் அல்லது அந்த எலும்பு தொகுதியை பாதுகாப்பதற்கான முறைமை சிறப்பாக இல்லை

இவ்வாறான செயற்திட்டங்கள் மூலம் தமிழ் மக்களுக்கு ஒரு நீதி கிடைக்கும் என்ற செயற்பாடுகள் உறுதியாக செல்லப்படாத நிலமைகள் கடந்த காலங்கள் போன்று ஒரு சாக்கு போக்கான நிலமைகள் மூலமாக மறுதலிக்கப்படும் சந்தர்ப்பங்கள் ஏற்ப்படுமா?  எண்ணம் தோன்றுகின்றது

இதற்கு அப்பால் மிக நெருக்கடியான விடயத்தை எதிர்கொண்டு இருக்கின்றோம் வடகிழக்கில் தொல்லியல் ஊடாக ஒரு திட்டமிட்ட முறையில் சட்டரீதியாக என கூறப்படுகின்ற  வகையிலே அது பௌத்த சின்னங்கள் இல்லையா? என ஆராய்கின்ற பேர்வையில் அதை உறுதிப்படுத்தி பௌத்தமயமாக்கல் நடவடிக்கை நடைபெறுகிறது

இதன் மூலம் தமிழ் மக்களுக்கான ஒரு நில ஆதாரமான நிலமை இல்லா தொழிக்கின்ற விடயத்தை இந்த அரசு கூட மிக நுட்பமான முறையில் கையாளப்படுகின்றது இது சட்டரீதியான என்ற பார்வையில் கொண்டு செல்லப்படுவதன் மூலம் இதற்கு மாற்று கேள்விகளே இல்லது சட்டத்துக்கு எதிராக நிற்க முடியாத ஒரு நிலையை ஏற்படுத்தி நீதிமன்றத்தின் ஊடாக கொண்டு சென்று தொல்லியல் சின்னங்கள் சிங்கள பௌத்த சின்னங்களாக உறுதிப்படுத்தப்பட்டு தமிழ் மக்களின் வாழ்வாதார நிலங்களை சிதைப்பதற்கான நடவடிக்கையாக பார்க்கிறேன்

அது மட்டும் மல்ல தமிழ் மக்களின் சிந்தனைகளை எண்ணக்கருக்களை ஒரு அரசியல் தீர்வு நோக்கி கொண்டு செல்ல விடாது கவனச்சிதைவுகளை உருவாக்கி தமிழ் தேசிய நிலைகளை ஒன்றுபடாது பல்வேறு திசைகளில் திசை திருப்பி  பொருளாதார நிலையை மந்தமாக கொண்டு செல்வதன் மூலம் அவர்களை தங்கி நிற்கும் நிலையில் வைத்து ஒரு தமிழ் தேசிய பாதை அல்லது தமிழ் அரசியல் விடிவு காலத்தை கொண்டு செல்ல விடாமல் இருக்கின்ற நடவடிக்கையாக பார்க்கவேண்டியுள்ளது

ஆகவே இவ்வாறான விடயங்களை அரசு மிக பொறுப்பான முறையில் தமிழ் மக்கள் நம்பிக்கை கொள்ளக் கூடிய வகையில் கையாள வேண்டும் தென்னிலங்கையில் இருக்கின்ற இனவாத சக்திகளுக்கு பயந்தே அதனை கைவிட்டு தற்போது துணிச்சலாக பல சந்தர்பங்களில் நடவடிக்கை எடுப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல விசாரணைகளை முன்னெடுத்து பல பேரை கைது செய்வதுடன் போதைப்பொருள் பாதாள குழுக்கள் சம்பந்தப்பட்ட விடயங்கள் ஊழல் மற்றும் இலஞ்சம் விடயங்களை முன்னெடுத்து செல்கின்ற இந்த அரசாங்கத்துக்கு ஏன் தென்னிலங்கையில் இருக்கும் இந்த இனவாத சக்தி சக்திகளுக்கு பயந்து கொண்டு இந்த விடயங்களை மெதுவாக மந்தமாக கையாளுகின்றதா?

அல்லது அரசுக்கும் அடிப்படையாக தமிழ் தேசியம் சார்ந்த விடயங்கள் வளர்ந்து விடக் கூடாது என்ற எண்ணம் இருக்கிறதா? என சந்தேகத்துடன் பார்க்க வேண்டிய நிலைமை இருக்கின்றது எனவே இதனை நீக்க வேண்டிய பொறுப்பு தேர்தல் காலங்களில் தமிழ் மக்களின் பாரிய வாக்குகளை பெற்றுக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் இருக்கிறது

spot_imgspot_img

More like this
Related

தையிட்டியில் ரூ.8.9 மில்லியன் விளையாட்டு திட்டம்

யாழ்ப்பாணம் - தையிட்டி ஸ்டார் விளையாட்டுக் கழக கரப்பந்தாட்ட மைதான நவீனமயமாக்கலுக்கான...

யாழில் பட்டாசு வெடித்து இளைஞன் பலி

யாழ்ப்பாணம் குருநகர் 5 மாடி குடியிருப்பு பகுதியில் இன்று (02) அதிகாலை...

யாழில் 18 வயதான இரட்டை சகோதரிகள் தீமூட்டி உயிர்மாய்த்தனர்!

யாழ்ப்பாணம், ஏழாலை பகுதியில் தமக்கு தாமே தீமூட்டி 18 வயதான இரட்டை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்