பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தகவல்

Date:

ஆன்மிக பேச்சாளர் மகாவிஷ்ணுவை காதலிப்பதாக நடிகை மிருணாளினி ரவி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருவரும் சேர்ந்து இருக்கும் படத்தை வெளியிட்டு, ‘உன்னைக் காதலிப்பது என்பது என்னையே காதலிப்பதாகும். எல்லா பிரபஞ்சத்திலும் எல்லா காலத்திலும் நான் உன்னையே தேர்ந்தேடுப்பேன்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகை மிருணாளினி தமிழில் ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து சாம்பியன், எனிமி, எம்.ஜி.ஆர் மகன், கோப்ரா, ரோமியோ ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார்.

மதுரையைச் சேர்ந்த மகாவிஷ்ணு தனியார் தொலைக்காட்சி ஒன்றின் நகைச்சுவை நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பிரபலமானவர். பின்பு ஆன்மிகப் பேச்சாளராக மாறினார்.

கடந்த 2024ஆம் ஆண்டு சென்னை அசோக் நகரில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத் திறன் குறித்து மகாவிஷ்ணு பேசிய பாவ புண்ணிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது.

பின்னர் சைதாபேட்டையில் உள்ள ஆண்கள் மாதிரி பள்ளியில் பேச சென்றபோது மகாவிஷ்ணுவின் பேச்சுக்கு மாற்றுத் திறனாளி ஆசிரியர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்தார். இந்த இரண்டு நிகழ்வுகள் தொடர்பான வீடியோக்கள் இணையதளங்களில் வெளியாகி சர்ச்சையானது.

spot_imgspot_img

More like this
Related

விசாரணையென்றதும் எகிறியதா இதயத்துடிப்பு?: மலைவிழுங்கி மகாதேவனின் மனைவியின் சிங்கப்பூர் திருகுதாளம் அம்பலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ஷ, கொழும்பு நிதிக்குற்றப் புலனாய்வுப்...

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை படகுச் சேவைக்கான நிதியுதவி இந்தியா மீண்டும் நீட்டித்துள்ளது

நாகப்பட்டினம் மற்றும் காங்கேசன்துறை இடையிலான பயணிகள் படகு சேவைக்கான நிதியுதவியை இந்திய...

வீடு மாறி குண்டடித்த இருவரும் கைது!

தெஹிவளை, சிரிசங்கபோ மாவத்தையில் உள்ள ஒரு வீட்டில் கைக்குண்டு வீசப்பட்டதில் இரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்