மட்டக்களப்பில் முகநூல் மோசடி கும்பலிடம் 8 இலட்சத்து 37 ஆயிரம் ரூபாவை இழந்த பெண்

Date:

மட்டக்களப்பில் முகநூலில் 3 நாட்களில் நண்பனான வெளிநாட்டு வைத்தியர் என போலியான வைத்தியர்  அதிர்ச்சி வைத்தியம் செய்வதாக அனுப்பிய பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்களை விமான நிலையத்தில் இருந்து வீட்டுக்கு கொண்டு வந்து தருவதற்கு பல இலச்சம் ரூபா பணம் கோரிய இணைய மோசடி கும்பலிடம் 8   இலட்சத்து  37 ஆயிரம் ரூபாவை பெண் ஒருவர் இழந்துள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

இது பற்றி தெரியவருவதாவது

குறித்த பொலிஸ் பிரிவிலுள்ள பெண் ஒருவரின் முதநூலில் லண்டனில் உள்ள வெள்ளைக்காரரான டான் என்ற வைத்தியர் கடந்த 13 ம் திகதி இணைந்து கொண்டு நண்பர்களாகி இருவரும் முகநூல் ஊடாக கருத்து பரிமாற்றம் செய்து வந்துள்ளனர்.

இதனை தொடர்ந்து குறித்த பெண்ணின் கையடக்க தொலைபேசிக்கு  கடந்த 16ம் திகதி இலங்கை கட்டுநாயக்கா விமான நிலைய பகுதியில் இயங்கிவரும் வெளிநாடுகளில் இருந்து வரும் பொதிகளை விநியோகிக்கும் கம்பனி என தெரிவித்து லண்டனில் இருந்து வைத்தியர் டான் என்பவர்  ஒரு பொதியை அனுப்பியுள்ளார் அதில் பல இலச்சம் ரூபா பெறுமதியான விலை உயர்ந்த பொருட்கள் உள்ளது அதனை சுங்க திணைக்களத்தில் இருந்து விடுவித்து தருவதற்கு (கிளியர்) 87 ஆயிரம் ரூபா பணம் அனுப்பும் வங்கி கணக்கிற்கு அனுப்புமாறு கோரினார்

இதனை நம்பி 17 ம் திகதி உடனடியாக 87 ஆயிரம் ரூபா அனுப்பிய பின்னர்  மேலும் 3 லட்சம் தேவை என்றதும் 3 லட்சம் ரூபா அனுப்பிய பின்னர்   அந்த பொதியை கிளியர் செய்ய பணம் கோரியதை அடுத்து அந்த பெண்ணின் தாயார் 3 லட்சத்து 50 ஆயிரம் ரூபாவை அந்த வங்கி கணக்கில் வைப்பில் இட்டுள்ளார்.

இதனை தொடர்ந்து மேலும் ஒரு இலச்சம் ரூபாவை மோசடி கும்பல்  கணக்கில் வைப்பில் இட்டபின்னர் அந்த nமுhசடி கும்பல் மேலும் ஒரு இலச்சத்து 50 ஆயிரம் ரூபாவை கொடுத்தால் பாசல் கிளியராகும் அதனை அனுப்புமாறு தெரிவிக்கப்பட்டது

இதனையடுத்து குறித்த பெண் சுதாரித்து கொண்டு மோசடி கும்பலிடம் பணம் தர முடியாது என்ற பின்னர் மீண்டும் அவர்களின் தொலைபேசி அழைப்பை ஏற்படுத்திய போது அது துண்டிக்கப்பட்டுள்ளது என பணத்தை மோசடி கும்பலிடம் இழந்த பெண் முறைப்பாடு செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.

எனவே இவ்வாறு முகநூல் ஊடாக இணையவழி மோசடி கும்பலிடம் பலர் பல இலச்சம் ரூபா பணத்தை இழந்துள்ளதாகவும் இதனை  கருத்தில் கொண்டு தெரியாத இந்த முகநூல் மோசடிகாரர்களிடம் அவதானமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்குமாறு பொலிசார் பொது மக்களிடம் கேட்டுக் கொள்கின்றனர்

spot_imgspot_img

More like this
Related

மயிலிட்டி காணி விடுவிப்பு: 14வது வாரமாகவும் தளராத மக்களின் அறவழிப் போராட்டம்

36 ஆண்டுகளாகத் தொடரும் அநீதி - மயிலிட்டி காணி விடுவிப்புக்காக 14...

துறைமுகநகரில் கடத்தப்பட்ட சீனப்பிரஜையின் சடலம் மீட்பு!

துறைமுக நகரில் வைத்து சீனப் பிரஜைகள் சிலரால் கடத்தப்பட்டுக் கொல்லப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்