மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிளை ஓடிப் பார்த்து வாங்குவதாக திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிளுடன் ஒருவர் கைது

Date:

மட்டக்களப்பில் விற்பனைக்கு உள்ள மோட்டார் சைக்கிள் வழங்குவதாக தெரிவித்து அதனை ஓடிப்பார்பதாக எடுத்துக் கொண்டு திருடிச் சென்ற நூதனமான சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய திருடன் ஒருவரை  இன்று ஞாயிற்றுக்கிழமை (19) கைது செய்துள்ளதுடன் திருடிச் சென்ற 3 மோட்டார் சைக்கிள்களை மீட்டுள்ளதாக மட்டு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்

இதுபற்றி தெரியவருவதாவது

குறித்த நபர் காத்தான்குடி பிரதேசத்தில் மோட்டார் சைக்கிள் வாங்கி விற்பனை செய்யும் கடை ஒன்றுக்கு கடந்த 2 வாரங்களுக்கு முன்னர் சென்று அங்கு விற்பனைக்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் அதனை ஓடி பார்க்க வேண்டும் என்றதையடுத்து நிறுத்தி வைத்திருந்த மோட்டார் சைக்கிளை கடை உரிமையாளர் குறித்த நபரிடம் கொடுத்தார்.

இதனையடுத்து குறித்த நபர் மோட்டார் சைக்கிளை அங்கிருந்து எடுத்து கொண்டு மட்டு திருகோணமலை வீதியில் உள்ள வீதி சமிக்கை  விளக்கு க்கு அருகில் நிறுத்தி கொண்டு    Ikman.ik  இணையத்தளத்தில்  மோட்டார் சைக்கிள் விற்பனைக்கு என விளம்பரப்படுத்திய  கொக்கட்டிச் சோலை பகுதியைச் சேர்ந்த வரை  தொடர்பு கொண்டு அந்த மோட்டார் சைக்கிளை வாங்குவதாகவும் உடன் குறித்த வீதி சமிக்கை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

இதனை தொடர்ந்து மோட்டார் சைக்கிளை விற்பனை செய்யும் நபர் குறித்த பகுதிக்கு வந்ததும் அவரிடம் அந்த மோட்டார் சைக்கிளை ஓடி பார்க்க வேண்டும் என தெரிவித்து காத்தான்குடியில் இருந்து ஓடி பார்ப்பதாக திருடி வந்த மோட்டார் சைக்கிளை அவரிடம் கொடுத்துவிட்டு குறித்த நபரின் மோட்டார் சைக்கிளை எடுத்துச் சென்று வாகரையில் விற்பனை செய்துள்ளார் எனவும் இவ்வாறு 2023ம் ஆண்டு ஒரு மோட்டார் சைக்கிளையும் திருடி விற்பனை செய்துள்ளதாக  பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது

இதனையடுத்து குறித்த நபரை கைது செய்ததுடன்   திருடப்பட்ட  3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டதுடன் குறித்த  நபர் கடந்த காலத்தில் 8 குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டு கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் வெளிவந்துள்ளதாகவும் இவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டு தலைமையக பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

பசிலின் பணத்தை பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு!

மாத்தறையில் 1.5 ஏக்கர் நிலத்தை முறைகேடாகப் பெறப்பட்ட நிதியைப் பயன்படுத்தி வாங்கியதாகக்...

கிளிநொச்சியில் புலிகளின் முகாமா?: அரசு விளக்கம்!

பளை (Palai) வனப்பகுதிக்குள் புலிகள் இயக்கத்தின் முகாம் ஒன்று இருப்பதாகச் சமூக...

சிறுநீர்ப்பையிலிருந்த 3.1 Kg கல் அகற்றல்: திருமலை வைத்தியசாலையில் சம்பவம்!

திருகோணமலையில் உள்ள ஒரு மருத்துவமனையில், 55 வயது நோயாளி ஒருவரிடமிருந்து 3.1...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்