கடும் வெப்பம்: பல பகுதிகளில் எச்சரிக்கை நிலை

Date:

இன்று (18) கிழக்கு மாகாணம் மற்றும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, மொனராகலை மாவட்டங்களுக்கு வெப்பமான காலநிலை தொடர்பான எச்சரிக்கையை வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ளது.

அதன்படி, பகல் வேளையில் மனித உடல் உணரும் வெப்பநிலையை குறிக்கும் வெப்பச் சுட்டெண் (Heat Index) சில பகுதிகளில் ‘எச்சரிக்கை (Caution)’ மட்டத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், பொதுமக்கள் போதுமான அளவு தண்ணீர் அருந்தவும், நேரடி சூரிய ஒளியில் நீண்ட நேரம் இருப்பதைத் தவிர்க்கவும், நாளின் அதிக வெப்பம் நிலவும் நேரங்களில் கடுமையான வெளிப்புற உடல் உழைப்புகளை குறைக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள் மற்றும் வெளிப்புற வேலைகளில் ஈடுபடுவோர் வெப்பத்தால் ஏற்படக்கூடிய உடல்நலப் பாதிப்புகளைத் தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

spot_imgspot_img

More like this
Related

நாடு முழுவதும் ‘ரடம ஏகட்ட’ விசேட நடவடிக்கை – 700-க்கும் மேற்பட்டோர் கைது

நாடு முழுவதும் நேற்று (ஜூலை 17) முன்னெடுக்கப்பட்ட ‘ரடம ஏகட்ட’ (Ratama...

பிரேத பரிசோதனையின் பின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு

கல்முனை - மட்டக்களப்பு பிரதான வீதி, மருதமுனை எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு...

ஈரான் குற்றச்சாட்டை அமெரிக்கா மறுப்பு

அமெரிக்க தாக்குதலில் பொதுமக்கள் உள்கட்டமைப்பு சேதமடைந்ததாக ஈரான் குற்றச்சாட்டு; அமெரிக்கா மறுப்பு போர்நிறுத்த...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்