வெளிநாட்டிலிருந்து வருவோரின் வீடுகளைக் குறிவைத்த திருடர்கள் சிக்கினர்

Date:

காரைநகரில் வெளிநாட்டிலிருந்து வருகை தருவோரின் வீடுகளை இலக்குவைத்து மேற்கொள்ளப்பட்ட திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இருவர் யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரால் இன்று (14) கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
காரைநகரிலுள்ள வீடொன்றில் 1600 கனேடிய டொலர், ஒரு சோடி காப்பு மற்றும் கடவுச்சீட்டு என்பனவும் மற்றொரு வீட்டில் 400 அமெரிக்க யூரோ மற்றும் இலங்கை மதிப்பிலான ஒரு இலட்சம் ரூபா என்பனவும் களவாடப்பட்டன.
இதுதொடர்பில் வீட்டின் உரிமையாளர்களால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டுக்கமைய யாழ்.மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார் விசாரணைகளை துரிதப்படுத்தியிருந்தனர்.
விசாரணைக்கமைய காரைநகரைச் சேர்ந்த 26 மற்றும் 27 வயதுடைய இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
சந்தேநபர்களிடமிருந்து களவாடப்பட்ட பணம், நகை என்பனவும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேநபர்களை மேலதிக விசாரணைகளின் பின் நீதிமன்றில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
spot_imgspot_img

More like this
Related

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரியின் புதிய அதிபராக அருட்தந்தை லெபோன் சுதன் கடமையேற்பு

கல்முனை கார்மேல் பற்றிமா கல்லூரி தேசிய பாடசாலையின் புதிய அதிபராக இலங்கை...

பஸ் லலித் விசாரணையில் கக்கியவை!

டுபாயிலிருந்து அழைத்து வரப்பட்ட பாதாள உலகக் குற்றவாளி லலித் கண்ணங்காரவிடம் நடத்தப்பட்ட...

அம்பிட்டிய சுமண ரத்ன தேரருக்கு விளக்கமறியல்

கைதான மங்களாராம விகாரையின் விகாராதிபதி அம்பிட்டிய சுமண ரத்ன தேரரை நாளை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்